லோக்சபா 40 தொகுதிகள், 18 தொகுதி இடைத்தேர்தலில் தீபா தனித்து போட்டி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு...

By sathish k  |  First Published Mar 15, 2019, 1:00 PM IST

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 40  தொகுதிகளுக்கும், மற்றும் 18 இடைத்தேர்தல் என இரண்டிலுமே தனித்து போட்டியிட போவதாக ஜெ. தீபா இன்று அறிவித்துள்ளார். 


நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 40  தொகுதிகளுக்கும், மற்றும் 18 இடைத்தேர்தல் என இரண்டிலுமே தனித்து போட்டியிட போவதாக ஜெ. தீபா இன்று அறிவித்துள்ளார். 

நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் பலமான கூட்டணி அமைத்து மோதவிருக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கும் கிட்டத்தட்ட எந்தெந்த தொகுதிகள் என தெரிந்துவிட்டது.  இப்படியிருக்கையில் புதியதாக அரசியல் கட்சித் தொடங்கி முதல் தேர்தலை சந்திக்கும் தினகரன், கமல் என  தனித்தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். அதேபோல சரத்குமார், சீமான் தனித்துப் போட்டியிடவுள்ள நிலையில் வர்ற தேர்தலில் பலமுனைப் போட்டி உறுதியாகியுள்ளது. 

Tap to resize

Latest Videos

இவர்கள், தங்களது முடிவை அறிவித்திருக்கும் நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல்  மவுனமாகவே இருந்ததால் அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என சொல்லப்பட்ட நிலையில் திடீரென  தனது கட்சிக்காரர்களுக்கு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அதில், 40 தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல்களில் தனித்து போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் சொல்லி இருப்பதாவது: "மக்களவை மற்றும் 18 சட்டப் பேரவைத் தேர்தலில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 16, 17 தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கட்சி அலுவலகத்துக்கு வழங்கலாம்" என கேட்டுக் கொண்டுள்ளார். தீபாவின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!