வேலூரில் உணவு டெலிவரி ஊழியர் மீது கொலை வெறி தாக்குதல்; ஒருவர் கைது

By Velmurugan s  |  First Published Jan 27, 2023, 5:25 PM IST

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தனது இருசக்கர வாகனத்தின் மீது மோதிய நபர்களிடம் நியாயம் கேட்ட உணவு விநியோகம் செய்யும் நபர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ஒருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நேற்று இரவு 10 மணி அளவில் உணவு விநியோகம் செய்யும் ஊழியரான திருமலைவாசன் தனது இருசக்கர வாகனத்தில் பணியை முடித்துவிட்டு வந்துகொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் வந்த பார்த்திபன் என்பவரின் இருசக்கர வாகனம் திருமலைவாசனின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த திருமலை வாசன் இது குறித்து நியாயம் கேட்டுள்ளார்.

பரந்தூர் விமான நிலைய பிரச்சினைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை; மத்திய அரசு கைவிரிப்பு

Tap to resize

Latest Videos

undefined

இது தொடர்பாக திருமலை வாசனுக்கும், எதிர் திசையில் வந்த பார்த்திபனுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்தகராறு கை கலப்பாக மாறவே, பார்த்திபனும், அவருடன் வந்த மற்றொரு நபரும் இணைந்து திருமலை வாசன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் ரத்தம் சொட்ட சொட்ட மயங்கி கிடந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு நபர், இந்த சம்பவத்தை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிடவே தற்போது அது வேகமாக பரவி வருகிறது. 

திருமணம் முடிந்த கையோடு அரசு பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கிய புதுமண தம்பதி

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள காட்பாடி காவல் துறையினர், காயமடைந்த திருமலை வாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் நடத்திய பார்த்திபன் என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பார்த்திபனுடன் வந்த மற்றொரு நபரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்விவகாரத்தில் சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இணையத்தில் பரவும் வீடியோவைக் கொண்டு யாரும் பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று காவல் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!