நெல்லை மாவட்டத்தை அடுத்த குறிச்சிகுளம் பகுதியில் வாலிபர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் மட்டும் கிடந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தை அடுத்த குறிச்சிகுளம் பகுதியில் வாலிபர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் மட்டும் கிடந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது தலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, உடல் கிடந்த சிறிது துரத்தில் அவரை தலை தனியாக வீசப்பட்டிருந்தது.
இதையும் படிங்க;- என்கிட்ட சும்மா சிக்குனு அழகான பொண்ணுங்க இருக்கு வரியா.. உல்லாசத்துக்கு அழைத்த புரோக்கர்.. இளைஞர் செய்த செயல்
இரண்டையும் கைப்பற்றப்பட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கொலை செய்யப்பட்டது யார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் அதே பகுதியை சேர்ந்த வெள்ளையப்பன் (எ) துரை(30) என தெரியவந்தது.
இதையும் படிங்க;- சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்.. கல்லா கட்டிய பிஸ்னஸ்க்கு ஆப்பு வைத்த போலீஸ்.!
வெளியூரில் வேலை செய்து வந்த நிலையில் திருவிழாவுக்காக சொந்த ஊர் வந்துள்ளார். இந்நிலையில், மறுநாள் காலை வெள்ளையப்பன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த இன்னொருவரின் மனைவிக்கும் துரைக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை அறிந்த அந்த பெண்ணின் கணவர் என் மனைவியுடனான தொடர்பை கைவிடுமாறு கூறியுள்ளார். ஆனால், இதை வெள்ளையப்பன் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பழக்கத்தை தொடர்ந்துள்ளார். இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.