உச்சக்கட்ட போதையில் மனையிடம் தகராறு..! ஆத்திரத்தில் தந்தையை வெட்டிக்கொன்ற மகன்..!

Published : Jan 13, 2020, 01:15 PM ISTUpdated : Jan 13, 2020, 01:16 PM IST
உச்சக்கட்ட போதையில் மனையிடம் தகராறு..! ஆத்திரத்தில் தந்தையை வெட்டிக்கொன்ற மகன்..!

சுருக்கம்

அமுதவள்ளியை தரக்குறைவாக பேசியதுடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார் கருப்பசாமி. தனது தாயை பற்றி பேசியதை பொறுக்காமல் மகன் சச்சின்குமார் தந்தையை கண்டித்துள்ளார். அதில் ஆத்திரமடைந்த கருப்பசாமி பெற்ற மகன் என்றும் பாராமல் குடிபோதையில் சச்சின்குமாரை அரிவாளால் தாக்கி இருக்கிறார். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இருக்கும் சிறுமுகையைச் சேர்ந்தவர் கருப்பசாமி(45). இவரது மனைவி அமுதவள்ளி(38). இந்த தம்பதியினருக்கு சச்சின் குமார்(17), சஞ்சய் குமார்(14) என இருமகன்கள் மகன் உள்ளனர். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் கருப்பசாமி அதிகமான குடி பழக்கத்திற்கு அடிமையானவர் என்று தெரிகிறது. இதனால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படவே இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

அமுதவள்ளி தனது மகன்களுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார். மூத்த மகன் கல்லூரியிலும், இளைய மகன் பள்ளியிலும் படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அமுதவள்ளிக்கு தொலைபேசி மூலம் அழைத்த கருப்பசாமி, குடும்ப விவகாரம் தொடர்பாக பேச வேண்டும் என அழைத்துள்ளார். இதனால் மகன் சச்சின் குமாரை அழைத்து கொண்டு கருப்பசாமி வீட்டுக்கு அமுதவள்ளி சென்றுள்ளார். அங்கு அவர் வழக்கம் போல குடித்துவிட்டு போதையில் இருந்துள்ளார்.

அமுதவள்ளியை தரக்குறைவாக பேசியதுடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார் கருப்பசாமி. தனது தாயை பற்றி பேசியதை பொறுக்காமல் மகன் சச்சின்குமார் தந்தையை கண்டித்துள்ளார். அதில் ஆத்திரமடைந்த கருப்பசாமி பெற்ற மகன் என்றும் பாராமல் குடிபோதையில் சச்சின்குமாரை அரிவாளால் தாக்கி இருக்கிறார். சுதாரித்துக்கொண்ட சச்சின்குமார் தந்தையிடம் இருந்து அரிவாளை பிடுங்கி அவரை கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டியுள்ளார். இதில் நிலைகுலைந்த கருப்பசாமி ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த பலியானார்.

'மாவீரன் பிரபாகரனின்' முதல் பிறந்தநாள்..! உற்சாகமாக கொண்டாடிய சீமான் குடும்பம்..!

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அமுதவள்ளி அலறியிருக்கிறார். சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் கருப்பசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். சச்சின் குமார் காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டு விசாரணையில் இருக்கிறார். 

குடிபோதையில் தாயை தகாத வார்த்தைகளில் பேசிய தந்தையை அரிவாளால் மகன் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

12 வயது சிறுமியிடம் அத்துமீறிய கிழவன்..! போக்சோவில் அதிரடி கைது..!

PREV
click me!

Recommended Stories

ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?
புதிய வகை ஆன்லைன் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் முதல் AI வாய்ஸ் வரை - தப்பிப்பது எப்படி?