தனது நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து மாதவிடாய் வலியால் துடித்த இளம்பெண்ணை மனசாட்சி இல்லாமல் 2 மணி நேரம் வைத்து கதற கதற பலாத்காரம் செய்தனர். மேலும், மிருகத்தை விட கொடூரமாக அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
கும்பகோணத்திற்கு பணி நிமித்தமாக வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை நள்ளிரவில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று 4 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு டெல்லியில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வரும் 23 வயது நிரம்பிய இளம்பெண்ணுக்கு பதவி உயர்வுக்கான பயிற்சி கும்பகோணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற இருந்தது. இதற்காக டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்தார். அந்த இளம்பெண் சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு கடந்த 2-ம் தேதி திருச்செந்தூர் விரைவு ரயிலில் இரவு 10.30 மணிக்கு வந்துள்ளார். தமிழ்தெரியாத அந்தப் பெண் கையிலிருந்த முகவரிக் கொண்டு ஆட்டோ டிரைவரிடம் கேட்டு, தன்னை அங்கு கொண்டு விடும்படி கேட்டுள்ளார். ஆனால், அந்த டிரைவரோ, வேறு இடத்திற்கு சென்றுள்ளார். இதனால், அந்தப் பெண் கூச்சலிட, கும்பகோணம் செட்டி மண்டபம் பைபாஸ் சாலையில் இறக்கி விட்டுச் சென்றுள்ளார்.
undefined
இதையும் படிங்க;- செடி புதருக்குள் இருந்து வரும் முனங்கல் சத்தம்... காதலர்களுக்கு படுக்கை அறையாக மாறிய வண்டலூர் பூங்கா..!
இந்நிலையில், அந்த வழியாக வந்த வாலிபரிடம் தன்னை தான் செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு சென்றுவிடுமாறு கேட்க அந்த வாலிபரும், சரி என்று கூறி அந்த இளம்பெண்ணை மறைமுகமான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர், தனது நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து மாதவிடாய் வலியால் துடித்த இளம்பெண்ணை மனசாட்சி இல்லாமல் 2 மணி நேரம் வைத்து கதற கதற பலாத்காரம் செய்தனர். மேலும், மிருகத்தை விட கொடூரமாக அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதையும் படிங்க;-
இதையடுத்து, கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, மாலதியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தது, கும்பகோணம் மோதிலால் தெருவைச் சேர்ந்த வசந்த் (21), தினேஷ் (24), புருஷோத்தமன் (19), அன்பரசன் (19) ஆகிய 4 பேர் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அந்த 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது, இளம்பெண்ணை கடத்தல், பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்பட் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில், வட மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்காக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகக் கூடாது என உறுதிமொழி ஏற்றனர். இந்த வழக்கு தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்து தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், பெண் வங்கி ஊழியர் ஆட்டோவில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 4 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிகளை இயற்கை மரணம் அடையும் வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.