பழனி பேருந்து நிலையம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை

By Velmurugan s  |  First Published May 3, 2023, 5:39 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் அருகில் முன் விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் பழனி குரும்பபட்டியைச் சேர்ந்தவர் கோபால். இவருடைய மகன் வடிவேல் (வயது 29). இவர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மே 1 தொழிலாளர் தின விடுமுறையை முன்னிட்டு அவரது வீட்டிற்கு வந்து இரண்டு நாட்களாக பழனியில் தங்கியுள்ளார். 

இந்நிலையில் இன்று காலை பழனி பேருந்து நிலையம் முன்பு நடந்து சென்ற வடிவேலை மர்ம நபர்கள்  வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த வடிவேலுவை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி வடிவேல் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Tap to resize

Latest Videos

undefined

வறுமை காரணமாக பழனியில் ரயில்முன் பாய்ந்து திமுக பிரமுகர் தற்கொலை

இது தொடர்பாக பழனி நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில், வடிவேலு மீது ஏற்கனவே பழனி அரசு மருத்துவமனையில் புகுந்து ஒருவரை வெட்டிய வழக்கு நிலுவையில் உள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் பழனியில்  முன் விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அழகி போட்டியில் பங்கேற்று மாடர்ன் உடையில் ஒய்யாரமாக நடந்துவந்த திருநங்கைகள்

click me!