RK Suresh: ஆருத்ரா மோசடி வழக்கு.. சிக்கிய ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்கை முடக்கி சரியான ஆப்பு வைத்த போலீஸ்.!

By vinoth kumarFirst Published May 3, 2023, 11:06 AM IST
Highlights

ஆருத்ரா மோசடியில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

ஆருத்ரா மோசடி புகாரில் தலைமறைவாக இருந்து வரும் நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே. சுரேஷ்  நிலையில் வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னையை தலைமை இடமாகக் கொண்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கிளைகள் அமைத்து மிகவும் குறுகிய காலத்தில் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்த நிதி நிறுவனம் ஆருத்ரா. பொதுமக்களிடம் குறைந்த பட்சமாக ரூ.1 லட்சம் முதலீடாக பெற்று அதற்கு 15 முதல் 25 சதவீதம் வரை வட்டியாக கொடுப்பதாகக் கோரி கோடிக் கணக்கில் முதலீடுகளைப் பெற்றது.

மேலும் தங்கள் முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி, தங்க நாணயம் என பல்வேறு சூப்பர், டூப்பர் ஆபர்களை அறிவித்து முதலீடுகளை வாரி குவித்தது. சுமார் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெற்ற பின்னர் இந்நிறுவனத்தின் மீது சந்தேகம் கொண்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் இந்நிறுவனம் தொடர்பான அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு முதலீடுகளை பெற தடை விதித்தனர்.

தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் தற்போது வரை மோகன்பாபு, செந்தில்குமார், ரூசோ,பாஜக நிர்வாகி ஹரிஷ் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த மோசடியில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, ஆர்.கே.சுரேஷ் மற்றும் நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 4 பேருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளிநாடு தப்பிச் சென்ற ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்க கோரி வங்கிகளுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் தற்போது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!