ஓடும் ரயிலில் நள்ளிரவில் அலறிய பெண்.. போதையில் கண்ட இடத்தில் கை வைத்து அத்துமீறிய CRPF வீரர்.. நடந்தது என்ன?

By vinoth kumar  |  First Published May 3, 2023, 10:36 AM IST

கர்நாடகா மாநிலத்திலிருந்து விசாகப்பட்டினம் வரை செல்லும் விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்த பெட்டியில் பெங்களூர் பகுதியைச் சார்ந்த வாசவி சவுகான்(38) தன் 10 வயது மகளுடன் பயணம் செய்தார். 


திருப்பத்தூர் அருகே ஓடும் ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிஆர்பிஎப் வீரரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். 

கர்நாடகா மாநிலத்திலிருந்து விசாகப்பட்டினம் வரை செல்லும் விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்த பெட்டியில் பெங்களூர் பகுதியைச் சார்ந்த வாசவி சவுகான்(38) தன் 10 வயது மகளுடன் பயணம் செய்தார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- என் வாழ்க்கையே நாசம் பண்ணிட்டு.. வேற ஒருத்தி கூட சந்தோஷமா இருப்பியா.. டார்ச்சர் செய்த இளம்பெண் கொடூர கொலை.!

ஜோலார்பேட்டைக்கும் காட்பாடிக்கும் இடையில் அதிகாலை 3 மணியளவில் ரயில் சென்று கொண்டிருந்தபோது மதுபோதையில் பயணம் செய்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நாயகனூர் பகுதியைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சுரேஷ் (38) என்பவர் அருகில் அமர்ந்து பயணம் செய்தபோது பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். 

இதனால், அதிர்ச்சியடைந்த பெண் அலறி கூச்சலிட்டதால் சக பயணிகள் அவரை கண்டித்தனர். இதுதொடர்பாக டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதையும் படிங்க;-  அண்ணா என்ன விட்டுடுங்க ப்ளீஸ்! கதறிய 14 வயது சிறுமி! விடாமல் 5 பேர் கூட்டு பலாத்காரம்! வெளியான பகீர் தகவல்.!

பின்னர், காட்பாடி ரயில்வே போலீசாரிடம் சுரேசை ஒப்படைத்தனர். ஆனால், சம்பவம் நடந்தது ஜோலார்பேட்டை ரயில்வே எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால்  காட்பாடி போலீசார் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாரிடம் சிஆர்பிஎப் வீரர் சுரேசை ஒப்படைத்தனர். மேலும் சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர். 

click me!