ஆந்திராவில் செம்மரம் கடத்தும் தமிழர்கள்.. கைதான 16 பேரில் தமிழர்கள் எத்தனை பேர் தெரியுமா?

By Narendran SFirst Published May 2, 2023, 8:42 PM IST
Highlights

ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தியதாக தமிழர்கள் உட்பட 16 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தியதாக தமிழர்கள் உட்பட 16 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திராவில் செம்மரங்கள் கடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. செம்மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதை தடுக்க ஆந்திர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் செம்மர கட்டை கடத்தல் தொடர்ந்து வருகிறது. இவ்வாறு கடத்தப்படும் செம்மரக் கட்டைகள் மருந்துகள், இசைக்கருவிகள், மரத்தால் ஆன பொருட்கள் செய்ய பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தாலி கட்டிய கணவரை ஆத்திரத்தில் போட்டு தள்ளிய மனைவி! அதிர வைக்கும் காரணம்..!

மேலும் ரேடியம், யுரேனியம் ஆகியவற்றை தயாரிக்கவும் செம்மரக் கட்டைகள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தியதாக தமிழர்கள் உட்பட 16 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திரா மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் கடத்துவதாக அம்மாநில காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: சிக்னலே காட்டாமல் வலது பக்கமாக திரும்பி பிரேக் போட்ட நபர்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கர விபத்து.!

அதன்பேரில் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில், செம்மரக்கட்டைகளை கடத்தியதாக 16 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்ஜ்களிடம் இருந்து 40 லட்சம் ருபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் மற்றும் 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 16 பேரில் 13 பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!