விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரத்தை சேர்ந்த 6 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.
விழுப்புரம் அருகே 5 பெண் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்து ஆபாச வீடியோ எடுத்த 4 சிறுவர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரத்தை சேர்ந்த 6 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக பள்ளி ஆசிரியர் விசாரித்ததில் சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சிறுமிக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க;- அண்ணா என்ன விட்டுடுங்க ப்ளீஸ்! கதறிய 14 வயது சிறுமி! விடாமல் 5 பேர் கூட்டு பலாத்காரம்! வெளியான பகீர் தகவல்.!
அதில், சிறுமி கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதுகுறித்து அச்சிறுமியிடம் குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டதில் எங்கள் பகுதியைச் சேர்ந்த 14 முதல் 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டனர். என்னை போன்று மேலும் 4 சிறுமிகளுக்கும் அவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தனர் என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
இதையும் படிங்க;- இரவு பகல் பாராமல் டார்ச்சர்! வலி தாங்க முடியாத மனைவி! கணவரின் மர்ம உறுப்பில் இரும்புக் குழாயால் அடித்து கொலை.!
இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் 4 சிறுவர்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்திய போது கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக 6 வயதுடைய 5 பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்தது தெரியவந்தது. மேலும் சிறுமிகளுக்கு ஆபாச படங்களை காண்பித்து ஆபாச வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.