திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த எம்.ஆர்.பாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(65). இவர் தமிழ்நாடு விவசாய இயக்கம் அமைப்பின் மாநில செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு இரண்டு மனைவி. முதல் மனைவி உடல் நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில், பிள்ளைகளின் எதிர்காலம் கருதி மற்றொரு பெண்ணை 2வதாக திருமணம் செய்துகொண்டார்.
திருச்சி அருகே விவசாய சங்க நிர்வாகி சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த எம்.ஆர்.பாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(65). இவர் தமிழ்நாடு விவசாய இயக்கம் அமைப்பின் மாநில செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு இரண்டு மனைவி. முதல் மனைவி உடல் நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில், பிள்ளைகளின் எதிர்காலம் கருதி மற்றொரு பெண்ணை 2வதாக திருமணம் செய்துகொண்டார்.
undefined
கடந்த 15 நாட்களுக்கு தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். பலமுறை அவரை சமாதானம் செய்து குடும்பம் நடத்த அழைத்த போதும் வரவில்லை. இதனால் சண்முகசுந்தரம் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு அதே பகுதியில் வசித்து வரும் அவரது சகோதரி சுசீலா மூன்று வேளையும் உணவு கொடுத்து வந்தார். வழக்கம் போல நேற்று காலை சாப்பாடு கொடுப்பதற்காக சகோதரி வந்தபோது சண்முகசுந்தரம் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அலறி கூச்சலிட்டார். இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சண்முகசுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாய சங்க பிரதிநிதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.