டெல்லியில் மதுபோதையில் கார் ஓட்டிய நபர் ஒருவர் காரின் முன்பகுதியில் தொங்கிய நிலையிலும் 3 கி.மீ. தூரத்திற்கு அப்படியே வேகமாகச் சென்றுள்ளார்.
டெல்லியில் வேகமாகச் சென்ற கார் ஒருவர் மீது மோதி, அவரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில், ஒரு நபர் காரின் முன்பகுதியில் (போனெட்) ஒட்டிக்கொண்டு இருப்பதையும், கார் ஓட்டுநர் அதைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஓட்டிச் செல்வதையும் காணலாம்.
போலீசார் வாகனத்தை முந்திச் சென்று வழிமறித்த பின்னரே கார் நிறுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில், அந்த கார் ஆஷ்ரம் சௌக்கில் இருந்து நிஜாமுதீன் தர்கா நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. பானட்டில் தொங்கிக் கொண்டிருந்தவர் சேத்தன் எனவும் அவரும் வாடகை கார் ஓட்டுநர் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பிரதமர் மோடியின் வாகனம் மீது செல்போன் வீசிய பெண் பாஜக தொண்டர்!
காரை ஓட்டிய நபர் ராம்சந்த் குமார் என்றும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். சேத்தன் ஒரு பயணியை இறக்கிவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது, ராம்சந்த் குமாரின் கார் தனது மீது 3 முறை உரசியதாவும் அதனால் காரை நிறுத்திவிட்டு வெளியே வந்தபோது, ராம்சந்த் குமார் காரை சேத்தன் மீது மோதியதாகவும் கார் மோதியதும் முன்பகுதியில் தொற்றிக்கொண்டதாவும் சேத்தன் கூறியுள்ளார்.
“நான் டிரைவராக வேலை செய்கிறேன், ஒரு பயணியை விட்டுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தேன். நான் ஆசிரமம் அருகே சென்றபோது, ஒரு கார் என் காரை மூன்று முறை உரசியது. பின்னர் நான் என் காரில் இருந்து வெளியே வந்து அவரது காரை வழிமறித்து நிறுத்த முயன்றேன்" என அவர் சொல்கிறார்.
"காரை நிறுத்தச் சொல்லியும் அவர் நிறுத்தவில்லை. அந்த நபர் முற்றிலும் குடிபோதையில் இருந்தார். வழியில் இருந்த போலீசார் என் நிலையைப் பார்த்து காரைப் பின்தொடர்ந்து வந்து நிறுத்த வைத்தனர்” என்று பாதிக்கப்பட்டவர் சேத்தன் தெரிவிக்கிறார். ராம்சந்த் குமாரை கைது செய்த டெல்லி போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பதி கோயில் உண்டியல் காணிக்கையில் கை வைத்தவர் கைது