திருப்பதி கோயில் உண்டியல் காணிக்கையில் கை வைத்தவர் கைது

By SG BalanFirst Published May 1, 2023, 8:33 AM IST
Highlights

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தப் பணியாளர் ஆடைகளுக்குள் ரூ.72,000 மதிப்பிலான அமெரிக்க டாலருடன் நழுவப் பார்த்தபோது பிடிபட்டார்.

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம், நகைகள் முதலிய பொருட்கள் கோவிலுக்கு வெளியே உள்ள கட்டிடத்தில் எண்ணப்படுகிறது. உண்டியல் காணிக்கையை எண்ணும்போது சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் தேவஸ்தான ஊழியர்கள், தன்னார்வலர்கள், வங்கி அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்கள் என பலரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இந்நிலையில், ஞாயிறு காலை காணிக்கை பணத்தை எண்ணும் பணி நடைபெற்றது. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியர் ரவிக்குமார் வேலை முடிந்து வெளியே வந்துள்ளார்.

சிசிடிவி கேமரா மூலம் அவரது நடவடிக்கைகளை கண்காணித்த தேவஸ்தான கணிகாணிப்பு அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. எனவே ரவிக்குமாரை தடுத்து நிறுத்தி அவரிடம் சோதனையிட்டனர். அப்போது அவர் தன் ஆடைகளுக்குள் ரூ.72 ஆயிரம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை ஒளித்து வைத்து எடுத்துச் செல்ல முயன்றது தெரியவந்தது.

பணத்தை அவரிடம் இருந்து கைப்பற்றிய கண்காணிப்பு அதிகாரிகள் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருமலை திருப்பதி போலீசார் ரவிக்குமாரை கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.

ஆன்லைன் மோசடியில் 12 லட்சத்தை இழந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர்.. விரக்தியில் எடுத்த அதிர்ச்சி முடிவு..

click me!