விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டி.வி.நகரை சேர்ந்த தட்சணாமூர்த்தியின் மகன் சேதுபதி(25). பஞ்சர் கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி முருகவேணி (19). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
தினமும் போதையில் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியதால் கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டி.வி.நகரை சேர்ந்த தட்சணாமூர்த்தியின் மகன் சேதுபதி(25). பஞ்சர் கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி முருகவேணி (19). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், போதைக்கு அடியான சேதுபதி தினமும் குடித்துவிட்டு வந்து முருகவேணியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால், பொறுமை இழந்த முருகவேணி கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி வீட்டில் போதையில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்து விட்டு எதுவும் தெரியாதது போல் நாடகமாடியுள்ளார்.
இதையும் படிங்க;- கட்டாயப்படுத்தி எம்பிபிஎஸ் படிக்க வைத்த பெற்றோர்.. மனவேதனையில் தற்கொலை செய்து கொண்ட மருத்துவக்கல்லூரி மாணவி.!
இது குறித்து தட்சணாமூர்த்தியின் 2வது மனைவி மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சந்தேகத்தின் பேரில் முருகவேணியிடம் விசாரணை நடத்திய போது போதைக்கு அடிமையாகி அடித்து கொடுமைப்படுத்தியதால் கொலை செய்ததாக மனைவி ஒப்புக்கொண்டார். இதையடுத்து முருகவேணியை போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணைகள் முடிந்த நிலையில் நீதிபதி ரகுமான் முருகவேணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து, கடலூர் மத்திய சிறைக்கு முருகவேணி அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க;- அவரு சொல்லிதான் பாஜக மாநில நிர்வாகி பிபிஜி. சங்கரை கொலை செய்தோம்.. சரணடைந்தவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்.!