Crime News: உடன் பிறந்த தம்பியுடன் கள்ளத்தொடர்பு; மனைவியை வெட்டி கொன்ற கணவன் காவல் நிலையத்தில் சரண்

Published : May 03, 2023, 11:18 AM IST
Crime News: உடன் பிறந்த தம்பியுடன் கள்ளத்தொடர்பு; மனைவியை வெட்டி கொன்ற கணவன் காவல் நிலையத்தில் சரண்

சுருக்கம்

திருச்சியில் தம்பியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த மனைவியை கணவனே வெட்டி கொலை செய்துவிட்டு கத்தியுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி  அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு அமர்நாத்(வயது 28), ரகுநாத்(25) என இரு மகன்கள் உள்ளனர். இருவரும் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகின்றனர். அமர்நாத்துக்கு மாரியம்மாள்(25) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.

அமர்நாத் தனது மனைவி, மகன்களுடன் தனியாக வசித்து வந்தார். தம்பி ரகுநாத் தனது தாய், தந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் ரகுநாத் அண்ணை பார்க்க அடிக்கடி வீட்டிற்கு சென்ற போது அண்ணி மாரியம்மாளுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் தங்கள் செல்போன்களில் ஆபாச படங்களை மாறி மாறி பரிமாறிக் கொண்டுள்ளனர்.

அழகி போட்டியில் பங்கேற்று மாடர்ன் உடையில் ஒய்யாரமாக நடந்துவந்த திருநங்கைகள்

இந்த கள்ளகாதல்  விவகாரம் அமர்நாத்திற்கு தெரியவந்துள்ளது. இருவரையும் பலமுறை அமர்நாத் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும் தொடர்ந்து இருவரும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் ஆத்திரமடைந்த அமர்நாத் தனது மனைவியின் கழுத்தை வெட்டியதில் மாரியம்மாள் அலறியபடியே ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். பின்னர்  வெட்டிய கத்தியுடன் அமர்நாத் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

பாகுபலி அனுஷ்கா பாணியில் வாளின் கூர்மையை பரிசோதித்த பெண் அமைச்சரின் வீடியோ வைரல்

படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மாரியம்மாள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  மாரியம்மாள்  உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டை காவல் நிலைய காவல் துறையினர் அமர்நாத் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!