பெங்களூரு மகாதேவ்புரா பகுதியில் பேயிங் கெஸ்ட் தங்கும் விடுதியில் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தபோது அவர்களை ரகசியமாக படம் பிடித்த 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு மகாதேவ்புரா பகுதியில் பேயிங் கெஸ்ட் தங்கும் இடத்தில் பெண்கள் குளித்துக்கொண்டிருந்தபோது அவர்களை ரகசியமாக படம் பிடித்த 25 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எங்குமே ஒரு பாதுகாப்பான சூழல் இல்லாத நிலை உருவாகியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த அசோக் என்ற இளைஞர், மகாதேவ்புராவில் உள்ள பெண்கள் விடுதிக்கு எதிரே உள்ள ஆண்கள் தங்கும் விடுதியில் தங்கு வந்துள்ளார்.
இரு விடுதிக்கும் இடையே இருந்த ஒரு சிறு துளையை பயன்படுத்தி, பெண்கள் விடுதியில் பெண்கள் குளிப்பதை ரகசியாமக படம் பிடித்துள்ளார். கடந்த ஜூன் 21-ம் தேதி பெண்களை படம்பிடித்துக் கொண்டிருந்த அசோக்கை,அப்பகுதி மக்கள் கையும் களவுமாக பிடித்தனர்.
தந்தையுடன் ஏற்பட்ட சொத்து தகராறு.. ஆத்திரத்தில் மகன் செய்த வெறிச்செயல்.. பகீர் சம்பவம்..
அப்போது, அசோக்கின் மொபைல் போனை ஆய்வு செய்ததில், பெண்கள் குளிக்கும் ஏழு வீடியோக்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த வீடியோக்களை அவர் கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களில் பதிவு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, அசோக் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 354C (Voyeurism) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் ரகசியமாக படம்பிடித்த வீடியோக்களை வைத்து பெண்களை மிரட்டுகிறாரா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியுடன் தகாத உறவு.. நண்பனின் தொண்டையை அறுத்து, ரத்தத்தை குடித்த கணவர்.. அதிர்ச்சி சம்பவம்..
10-ம் வகுப்பு படிக்கும் மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்கள்.. பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்..