புதுச்சேரியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி முதலியார்பேட்டை அடுத்த இந்திரா நகர் காமராஜ் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 34). ஓட்டுநராக பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி ஸ்டீபன் தனது அண்ணன் செந்திலுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த ரமேஷ், செந்திலுடன் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றவே செந்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரமேஷை வெட்டியுள்ளார். மோதலை தடுக்க முயன்ற ஸ்டீபனுக்கும் கத்தி குத்தில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மோதல் குறித்து முதலியார் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் ரமேஷ் மீது கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அண்மையில் ரமேஷ் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை ரமேஷ் முதலியார் பேட்டை ஆலை ரோட்டில் உள்ள பாஜக எம்எல்ஏ அலுவலகத்தில் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
undefined
அப்போது அங்கு வந்த ஸ்டீபன் ரமேசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே ஸ்டீபன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரமேசை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். குடியிருப்புகள், ஆட்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றதைத் தொடர்ந்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
குழந்தை திருமணம் செய்தேன் என கூறிய ஆளுநர் ரவி மீது ஒழுங்கு நடவடிக்கை..! கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உயிருக்கு போராடிய ரமேஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரமேசை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பாஜக சட்டமன்ற உறுப்பினர் வளாகத்தில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.