
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் நரேந்திர சிங் என்ற நபர் வசித்து வருகிறார். அவருக்கு வயது 32. இந்த நிலையில் தனது தந்தையுடன் ஏற்பட்ட சொத்து தகராறில், தனது தந்தையை கொல்ல, அவர் ஒரு கொலையாளியை நியமித்துள்ளார். 65 வயதாகும் போலி சிங்கைக் (65) கொலை செய்ய 2.5 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தக் கொலையாளியை வாடகைக்கு அமர்த்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மனைவியுடன் தகாத உறவு.. நண்பனின் தொண்டையை அறுத்து, ரத்தத்தை குடித்த கணவர்.. அதிர்ச்சி சம்பவம்..
இந்த சம்பவம் ஜூன் 22 மற்றும் 23 ஆம் தேதி இடைப்பட்ட இரவில் நடந்ததாக புலந்த்ஷாஹர் எஸ்எஸ்பி ஷ்லோக் குமார் கூறினார். மேலும் " ஒரு நபர் சில அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனடியா நாங்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, துப்பாக்கியால் சுடப்பட்ட நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
விசாரணையின் போது, ஒரு நிலத்தை விற்று விட்டு, தனக்கு பங்கு கொடுக்காததால், நரேந்திரன், தன் தந்தை மீது அதிருப்தியில் இருந்தது தெரிய வந்தது. பின்னர் அவர் தனது கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் குமார் என்ற நபரைத் தொடர்பு கொண்டு, டெல்லியைச் சேர்ந்த ஒப்பந்த கொலையாளியான அபிஷேக் குமாரை வேலைக்கு அமர்த்தினார். அதன்படி, சதித்திட்டம் தீட்டி, அபிஷேக், நரெந்திர சிங்கின் தந்தையை சுட்டுக் கொன்றுள்ளார்.” என்று தெரிவித்தார். மேலும் நரேந்திர மற்றும் அபிஷேக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், லோகேஷ் தலைமறைவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
10-ம் வகுப்பு படிக்கும் மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்கள்.. பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்..