உன் மனைவி இப்போ என்னுடன்.. வெளிநாட்டில் உள்ள கணவனுக்கு வீடியோ கால் செய்த கள்ள காதலன்.

Published : Jun 17, 2022, 06:12 PM IST
 உன் மனைவி இப்போ என்னுடன்..  வெளிநாட்டில் உள்ள கணவனுக்கு வீடியோ கால் செய்த கள்ள காதலன்.

சுருக்கம்

ஆந்திரப் பிரதேசத்தில் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்த பெண் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடந்துள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்த பெண் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடந்துள்ளது.

பெரும்பாலான கொலை தற்கொலைகள் கள்ளத்தொடர்பை மையமாக வைத்து அரங்கேறி வருகிறது. திருமண உறவில் இருந்துவரும் கணவனும் மனைவி இடையே ஏற்படும் மனக் கசப்பு அவர்கள் கள்ளக் காதலில் தள்ளி விடுகிறது. கணவனோ மனைவியை, அன்பிற்காக,  உடல் சுகத்துக்காக மூன்றாவது நபரையும் நாடும்போது அது பெரும் விபரீதத்தை ஏற்படுத்துகிறது. இறுதியில் இந்த உறவில் ஈடுபடுபவர்கள் கொலை அல்லது தற்கொலைக்கு இறையாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்ட வந்த பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார். ஷேக் பராகான்  என்ற பெண் தனது குழந்தைகளுடன் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் வேம்பள்ளே, பாரதி நகரில் வசித்து வந்தார்.

இவரது கணவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலை நிமித்தமாக குவைத்துக்கு சென்றார் அங்கிருந்து குடும்ப செலவுக்கு மனைவிக்கு மாத மாதம் பணம் அனுப்பி வைத்தார். கணவன் வெளி தேசத்தில் இருப்பதால் குழந்தைகளை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டிய மனைவி உடல் சுகத்துக்காக பாதை மாறினார், வேறொரு  ஆணின் உறவை தேடினார், இந்நிலையில் ஒரு இளைஞருடன் அவர் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்தார். விஷயம் தெரிந்த உறவினர்கள் அவரது கணவருக்கு தகவல் தெரிவித்தனர், ஆனால் அவர் வெளிநாட்டில் இருந்ததால் ஒன்றும் செய்ய முடியாததால் அதை அவர் பொருட்படுத்தவில்லை.

இந்நிலையில் கள்ளக்காதலன் பாஷா கள்ளக் காதலி பரஹானுடன் நெருக்கமாக இருந்தவாறு அவளின் கணவனுக்கு வீடியோ கால் செய்து நானும் உன் மனைவியும் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என கூறினார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது கணவன் மனைவிக்கு பணம் அனுப்புவதை நிறுத்தினார், இதானல் பரஹான்  ஏற்கனவே பணத்தை வட்டிக்கு விட்டு சம்பாதித்து வந்த நிலையில் வட்டிப் பணத்தை வசூல் செய்ய ஆரம்பித்தார். தனக்கு வர வேண்டிய பணத்தை வசூலிப்பதில் தடை ஏற்பட்டது, அதில் பலர் பணத்தை திருப்பித்தர மறுத்தனர். பணத்தை திருப்பி கொடுக்காதவர்கள் மீது அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அப்போது காவல் அதிகாரி ஒருவருடன் அவருக்கு திருமணத்துக்கு புறம்பான உறவு ஏற்பட்டது. இதே நேரத்தில் கள்ளக்காதலன் பாஷா பராஹானுடன் காவலர்களுக்கு முறைகேடான உறவு இருப்பதாக கூறி பிரச்சினையை எழுப்பினார். இந்நிலையில் பராஹான் சந்தேகத்துக்கு இடமான முறையில் ரத்த வெள்ளத்தில்   இறந்து கிடந்துள்ளார். பராஜான் தனது கள்ளக்காதலன் பாஷாவால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அவர் போலீசாருடன் நெருக்கம் காட்டி வந்த நிலையில், அந்த ஆத்திரத்தில் இந்த கொலையை கள்ளக் காதலன் பாஷா செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!