சார் நான் உங்க ஸ்டுடென்ட்ஸ் சார்..என்ன விட்டுடுங்க.. கதறியும் விடாமல் பாலியல் தொல்லை..டீச்சருக்கு சரியான ஆப்பு

Published : Jun 17, 2022, 11:41 AM IST
சார் நான் உங்க ஸ்டுடென்ட்ஸ் சார்..என்ன விட்டுடுங்க.. கதறியும் விடாமல் பாலியல் தொல்லை..டீச்சருக்கு சரியான ஆப்பு

சுருக்கம்

கடந்த 13-ம் தேதி முதல் பள்ளி திறக்கப்பட்டு வழக்கம்போல வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கணித ஆசிரியர் செந்தாமரைக்கண்ணன் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. 

பல்லடம் அருகே 9ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேகாம்பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 300-க்கு மேற்பட்ட மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக பழனிச்சாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் கணித ஆசிரியராக செந்தாமரை கண்ணன்(57) என்பவர் உள்ளார். 

கடந்த 13-ம் தேதி முதல் பள்ளி திறக்கப்பட்டு வழக்கம்போல வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கணித ஆசிரியர் செந்தாமரைக்கண்ணன் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்குச் சென்று தலைமையாசிரியரிடம் இதுகுறித்து புகார் அளித்தனர். 

அதனைத் தொடர்ந்து பல்லடம் போலீசார் பள்ளிக்குச் சென்று மாணவியர் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பள்ளி ஆசிரியர் செந்தாமரைக்கண்ணனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக பல்லடம் அனைத்து மகளிர் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்.. கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.. கள்ளக்காதலன் எஸ்கேப்..
லெஸ்பியன் உறவு! மால்தி தேவியுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!