குமார், சீதாவுடன் அடிக்கடி உல்லாசமாக இருப்பாராம். சம்பவம் நடந்த இரவு குமார், சீதாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சீதாவை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அதற்கு சீதா வர மறுத்துள்ளார். இதனால் குமார் வலுக்கட்டாயமாக சீதாவுடன் உல்லாசத்திற்கு முயன்றபோது சீதா மீண்டும் மறுத்துள்ளார்.
உல்லாசத்துக்கு வர மறுத்த கள்ளக்காதலியின் தலையில் அம்மி குழவிக் கல்லை போட்டு கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீழமணக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேல் மனைவி சீதா(45). இவர் சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ பரிசோதனை மையத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 13ம் தேதி இவர் வீட்டில் ரத்த வெள்ளத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து அவரது மகள் நிஷாந்தி புவனகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி குமார் (48) என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர் சீதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்;- சீதாவின் கணவர் இல்லாததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சீதாவுக்கும், கட்டிட தொழிலாளியான குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து குமார், சீதாவுடன் அடிக்கடி உல்லாசமாக இருப்பாராம். சம்பவம் நடந்த இரவு குமார், சீதாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சீதாவை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அதற்கு சீதா வர மறுத்துள்ளார். இதனால் குமார் வலுக்கட்டாயமாக சீதாவுடன் உல்லாசத்திற்கு முயன்றபோது சீதா மீண்டும் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார் அருகில் இருந்த அம்மி குழவிக் கல்லை எடுத்து அவரது தலையில் அடித்துக் கொலை செய்துள்ளார். இதனையடுத்து, குமாரை கைது செய்து சிறையில் அடைத்ததனர்.