சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பிரபல ரௌடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மகன் சிபி (வயது 25). இவர் மீது கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் கருமலைக்கூடல் காவல் நிலைய குற்ற பதிவேடு பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் புதுசாம்பள்ளியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இருட்டான பகுதியில் கொடூரமான முறையில் சிபி வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் அது தமிழகத்திற்கே பெருமை - பொன்.ராதாகிருஷ்ணன்
மேட்டூர் பகுதியில் நள்ளிரவில் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்ற தகவல் மட்டும் முதலில் காவல் துறையினருக்கு கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேர தேடலுக்குப் பிறகு சம்பவ இடத்தை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். சிபியின் உடலை பார்த்த அவரது பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.
மேட்டுப்பாளையம் - உதகை இடையே மகாராஜா சிறப்பு மலைரயில் - பொதுமேலாளர் தகவல்
சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப விடாமல் காவல் துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 7ம் தேதி கருமலைக்கூடல் மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஒரு கொலை நடைபெற்றது. அந்த கொலை வழக்கிலும் சிபி தொடர்புடையவர் அதனால் பழிக்கு பழிவாங்க இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.