புதுச்சேரியில் சாலையோரம் படுத்து உறங்கிக்கொண்டிருந்த தனியார் நிறுவன காவலாளியிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர்கள் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து காவலாளியை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி சாமிப்பிள்ளைத்தோட்டம் 8வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துகுமரன்(வயது 57). தனியார் நிறுவன காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி காளியம்மாள்(எ)காஞ்சனா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் முத்துக்குமரன் நேற்று காலை புதுச்சேரி வெள்ளாளர் வீதியில் உள்ள வங்கி அருகில் உள்ள வாய்க்காலில் முகம், தலையில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.
இது தொடர்பாக அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பெரியக்கடை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். காவல் துறையினது சம்பவ இடத்துக்கு சென்று முத்துகுமரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
குளத்தில் குளிக்கச் சென்ற இராணுவ வீரரின் 2 மகள்கள் நீரில் மூழ்கி பலி; கிராம மக்கள் சோகம்
அதில் நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் தூங்கிக்கொண்டிருந்த முத்துக்குமரன் பையில் கைவிட்டு பணத்தை தேடிய நிலையில், விழித்த முத்துக்குமரன் அவர்களை தடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் முத்துக்குமரனை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்வதும், அதில் மயங்கி அவர் விழுந்து கிடப்பதும் பதிவாகி இருந்தது.
வேலை வாங்கி தருவதாக கூறி கிராம பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த ஊர் தலைவர்; கடலூரில் பரபரப்பு
எனவே அவர்கள் 3 பேரும் தாக்கியதில் உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து சந்தேக மரணம் என்று பதியப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ள காவல் துறையினர் 3 பேரையும் தேடி வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை புதுச்சேரி காவல் துறையினர் வெளியிட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சிசிடிவி கட்சியில் முதியவரை இளைஞர்கள் இரண்டு பேர் கடுமையாக தாக்கும் நெஞ்சை பதபதைக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.