கூல்டிரிங்சில் மயங்க மருந்து கொடுத்து கல்லூரி மாணவி பலாத்காரம்! என் வாழ்க்கையின் நாசம் பண்ணிட்டியே கதறல்..!

By vinoth kumar  |  First Published Jun 29, 2023, 8:22 AM IST

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்நல்லூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் நாகர்கோவிலில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் தங்கி படித்து வருகிறார். இவரது உறவுக்கார வாலிபர் சிவகுமார்(25).


குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கல்லூரி மாணவியை உறவுக்கார வாலிபர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்நல்லூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் நாகர்கோவிலில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் தங்கி படித்து வருகிறார். இவரது உறவுக்கார வாலிபர் சிவகுமார்(25). இவரது சகோதரியை குமரி மாவட்டம், மண்டைக்காடு பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். சிவகுமார் தன் சகோதரி வீட்டில் தங்கி இருந்து அதேபகுதியில் உள்ள ஒரு படகு கட்டும் தளத்தில் வேலைசெய்து வந்துள்ளார். இந்நிலையில், சிவகுமாருக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- அடப்பாவி.. கல்லூரி மாணவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர காதலன்.. எப்படி தெரியுமா?

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது அக்கா மகளுக்கு பிறந்தநாள் என்றும், கேக் வெட்டி கொண்டாட போவதால் நீயும் வரவேண்டும் என்று மாணவியை சிவகுமார்அழைத்துள்ளார். இதை நம்பி அந்த இளம்பெண் வந்ததார். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். இதை குடித்த சிறிது நேரத்தில் மாணவி மயக்கமடைந்தார். இதனையடுத்து, சிவகுமார், மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். சிறிது நேரத்தில் கண்விழித்த பார்த்த மாணவி தனக்கு நேர்ந்த சம்பவத்தை உணர்ந்து அழுது கதறி அவரிடம் சண்டை போட்ட போது திருமணம் செய்வதாக சிவகுமார் சமாதானம் செய்துள்ளார். 

இதையும் படிங்க;-  உன்னால தான் நான் கர்ப்பமா இருக்கேன்.. கதறிய கல்லூரி மாணவி.. மனம் இறங்காத காதலன்.. இறுதியில் நடந்தது என்ன?

இந்த சம்பவத்தை அறிந்த சிவகுமாரின் பெற்றோர், கடும் எதிர்ப்பு தெரிவித்து மாணவியை தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.  இதையடுத்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவகுமார் மற்றும் அவரது தந்தை மீது மாணவி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான அவரை தேடிவருகின்றனர். 

இதையும் படிங்க;-   Video: லேடீஸ் ஹாஸ்டல் முன்பு நின்று சுய இன்பம்! நேரில் பார்த்த பெண்கள்! என்ன செய்தார்கள் தெரியுமா?

click me!