திண்டுக்கல்லில் பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பெட்ரோல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலையில் உள்ள முருக பவனம் பகுதியில் பாரத் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்க் முன்பாக சாலையின் ஓரத்தில் வெல்டிங் பட்டறை தொழிலாளியான அழகு பாண்டி என்ற நபருடன் இரண்டு நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அழகு பாண்டியை பெட்ரோல் பங்க் நிலையத்திற்குள் அழைத்து வந்து கழுத்து, முகத்தில் பயங்கரமாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அழகு பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டியலின மக்கள் கோவிலுக்குள் வர எதிர்ப்பு; விழுப்புரத்தை தொடர்ந்து கரூரில் கோவிலுக்கு சீல்!
மேலும் அழகு பாண்டியன் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். திண்டுக்கல் பழனி பிரதான சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இளைஞர் ஒருவர் பட்டப் பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த 73 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் தண்டனை விதிப்பு