திமுக கவுன்சிலர் மகள் வாயில் துணி வைத்து காட்டு பகுதியில்.. சிறுவனுக்கு தொடர்பா? போலீஸ் தீவிர விசாரணை..!

By vinoth kumar  |  First Published Jun 8, 2023, 2:59 PM IST

தருமபுரி நகராட்சி 8வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் புவனேஸ்வரன். இவர் தருமபுரியில் பழைய ரயில்வே லைன் பகுதியில் உள்ள கோல்டன் தெருவில் வசிக்கிறார். இவரது மகள் ஹர்ஷா(23).


தருமபுரியில் திமுக கவுன்சிலரின் மகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தருமபுரி நகராட்சி 8வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் புவனேஸ்வரன். இவர் தருமபுரியில் பழைய ரயில்வே லைன் பகுதியில் உள்ள கோல்டன் தெருவில் வசிக்கிறார். இவரது மகள் ஹர்ஷா(23).  தனியார் பார்மஸி ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று காலை கோம்பை வனப்பகுதியில் இளம்பெண் ஒருவர் பாறைகளுக்கு இடையில் வாயில் துணி வைத்து கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்! உள்ளே நுழைந்த போலீஸ்! அரைகுறை ஆடைகளுடன் 3 பெண்கள் செய்த காரியம்.!

இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண் யார் என்பது குறித்துது விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், உயிரிழந்து கிடந்தது கவுன்சிலர் புவனேஸ்வரனின் மகள் ஹர்ஷா என தெரியவந்தது. இளம்பெண் கடத்தி வந்து கொலை செய்து நரசிங்காபுரம் கோம்பை பகுதியில் உடலை வீசி சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க;-  பட்டப்பகலில் திமுக நிர்வாகியும் சினிமா பட டைரக்டர் நட்சத்திர ஹோட்டலில் வைத்து வெட்டிப்படுகொலை..!

click me!