பெண்ணைக் கொன்று கொன்று புதைத்த ஆண் நண்பர்... ஆசை வார்த்தைகள் கூறி ஆற்றிற்கு அழைத்து சென்று கொடூரம்...

By sathish kFirst Published Sep 22, 2019, 3:51 PM IST
Highlights

பெண் ஒருவரை அவரின் ஆண் நண்பர்  மிரட்டி நகை, பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அவரைக் கொலை செய்து ஆற்றில் புதைத்தவர்களை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

பெண் ஒருவரை அவரின் ஆண் நண்பர்  மிரட்டி நகை, பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அவரைக் கொலை செய்து ஆற்றில் புதைத்தவர்களை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அடுத்துள்ளது விளானூர். இந்த கிராமத்தைச் சேர்ந்த பாலசந்தர் பல வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இந்நிலையில் இவருடைய மனைவி பஞ்சவர்ணம் , தனது மூன்று பெண் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து கொடுத்த பின் தனியாக வாழ்ந்துவந்துள்ளார்.

தனியாக வாழ்ந்துவந்த இவர், வெவ்வேறு ஆண் நண்பர்களின் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனால், தனது நண்பர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது . இதில், காளிமுத்து என்ற நபர், தனக்கு அதிக கடன் ஏற்பட்டதாகக் சொல்லி பஞ்சவர்ணத்திடம் காசு கேட்டிருக்கிறார். நகைகளை அடகுவைத்து தனக்கு கொடுக்குமாறு காளிமுத்து, பஞ்சவர்ணத்திடம் சொல்லியிருக்கிறார்.

நகைகளை அடகு வைக்கச் சென்ற போது காளிமுத்து ஆசை வார்த்தைகள் காட்டி, பல்வேறு இடங்களுக்கு பஞ்சவர்ணத்தை கடந்த 4ம் தேதி வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பல இடங்கள் சுற்றியபின் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அடுத்த வடகீழ்குடியில் ஆற்றுப்படுகையில் பஞ்சவர்ணத்தை காளிமுத்து தனது நண்பர்களுடன் இணைந்து கொலை செய்து புதைத்துள்ளார். யாருக்கும் தெரியாமல் புதைத்த பின், காளிமுத்து தனது நண்பர்களுடன் அங்கிருந்து தப்பியுள்ளார்.

இந்தநிலையில், பஞ்சவர்ணத்தை காணவில்லை என்று கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், காளிமுத்து குறித்து போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, காளிமுத்துவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பஞ்சவர்ணத்திடம் நகை, பணத்தைப் பறித்துக் கொண்டு வடகீழ்குடி ஆற்றில் புதைத்தது தெரியவந்திருக்கிறது. அதன் அடிப்படையில் காளிமுத்து, அவரது நண்பர் சிவக்குமார், லல்லின்பாய் உள்ளிட்டோராய் கைது செய்துள்ளனர்.

மேலும் விசாரணையில், பஞ்சவர்ணத்தை புதைத்த இடத்தை காளிமுத்துவும் அவரது நண்பர்களும் அடையாளம் காட்டினர். காவல்துறை, வருவாய்த் துறையினர் முன்னிலையில் புதைத்த இடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு பஞ்சவர்ணத்தின் உடல், அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பஞ்சவர்ணத்தை மிரட்டி ரூ.3 லட்சம் பணம் மற்றும் 7.5 சவரன் நகையை வாங்கியதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

click me!