நித்யானந்தா ஆசிரமத்தில் பல அட்டூழியங்கள் நடக்கிறது... கனடா சிஷ்யை அதிர்ச்சி வீடியோ!!

By sathish k  |  First Published Sep 22, 2019, 3:18 PM IST

நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்த கனடா நாட்டைச் சேர்ந்த சாரா நித்யானந்தா மக்களை ஏமாற்றி வருகிறார் என்றும் அவர் மீது புகார் தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் பேசிய 30 நிமிட வீடியோவில்  நித்யானந்தா மீதும் அவரது ஆசிரமத்தில் உள்ளவர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.


பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்த கனடா நாட்டைச் சேர்ந்த சாரா ஸ்டீபனி லாண்ட்ரி என்ற இளம் பெண் நித்யானந்தா மக்களை ஏமாற்றி வருகிறார் என்றும் அவர் மீது புகார் தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.அவர் பேசிய 30 நிமிட வீடியோவில்  நித்யானந்தா மீதும் அவரது ஆசிரமத்தில் உள்ளவர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார் சாரா.

கனடாவைச் சேர்ந்த சாரா நித்யானந்தா ஆசிரமத்துக்கு வந்து துறவறம் மேற்கொண்டு ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்பா பிரியானந்தா என்ற பெயருடன் குருகுல ஆச்சார்யாவாகப் பணியாற்றி வந்துள்ளார். பின்னர், நித்யானந்தா பற்றிய உண்மையை நேரில் பார்த்து அவர் போலி என அறிந்து மீண்டும் தன் சொந்த நாட்டுக்கே திரும்பிவிட்டதாகத் தெரிவித்துள்ளார் சாரா.

Tap to resize

Latest Videos

அவர் பேசி வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் பேசியுள்ள சாரா ஸ்டீபனி லாண்ட்ரி, நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து கடந்த வருடம் ஆகஸ்டு மாதமே நான் வெளியேறிவிட்டேன். அங்கு நடந்த சில விஷயங்கள்தான் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது, மேலும் ஆசிரமத்திலிருந்து வெளியில் வரத் தூண்டியது. நான் அங்கு தங்கியிருந்த அனைத்து நாள்களும் மிகச் சிறந்தது என நினைத்திருந்தேன். ஆனால் அவை எல்லாமே  பொய் எனப் நாட்கள் ஆக ஆக தெரிந்துகொண்டேன்.

கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் நான் திருவனந்தபுரத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு ஒரு ரகசிய பணிக்காக அனுப்பப்பட்டேன். அந்த ஆசிரமத்தில் பல சிறுவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். அவர்களுக்குச் சந்திர மந்திரத்துடன் தங்களை இணைப்பது, மூன்றாவது கண்ணைத் திறப்பதற்கான பயிற்சி, ஒருவர் உடலில் இருக்கும் நோய்களைக் கண்டுபிடிப்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன.

நான் திருவனந்தபுரம் ஆசிரமத்தில் குருகுல ஆச்சார்யாவாகச் சென்றிருந்தேன். அங்குள்ள குழந்தைகளுக்கு சமூக வலைதளம் பயன்படுத்துவது அதில் அவர்களைச் செயல்பட வைக்க வேண்டும் என்ற வேலை எனக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அதற்காக தினமும் அந்தச் சிறுவர்களுக்குப் பாடம் எடுக்க வேண்டியிருந்தது. அதனால் அவர்கள் என்னிடம் நெருங்கிப் பழகினார்கள்

திடீரென ஒரு நாள் இரவு நான் என் அறையில் நான் இருக்கும் சமயத்தில் இரண்டு சிறுவர்கள் வந்து சந்தித்தனர். அவர்கள் என்னைப் பார்த்ததும் அவர்கள் அழத்தொடங்கி விட்டனர். அப்போ அவர்கள்  என்னிடம் "நித்யானந்தா செய்வது எல்லாமே பொய்" என்று கூறினர், நாங்கள் இரும்புக் கம்பிகள் நிறைந்த அறையில் சிறைவைக்கப்பட்டுள்ளோம் என அவர்கள் கூறியதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

பின்னர் இதைப் பற்றி நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ள மூத்த அதிகாரிகளான நித்யானந்தா, ரஞ்சிதா மற்றும் திருவனந்தபுரம் ஆசிரமத்தை நடத்துபவர் ஆகியவர்களிடம் நான் இதுபற்றி பேசினேன். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  அவரின் உண்மையான முகம் தெரிந்த அடுத்த சில நாள்களில் நான் அங்கிருந்து கிளம்பி கனடா வந்துவிட்டேன். அந்த குழந்தைகளைக் காப்பாற்றவேண்டும் என இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். 

click me!