பிளஸ்-1 மாணவியிடம் ஆபாசமாக பேசிய அரசு பள்ளி ஆசிரியர்கள்... 12 பேர் மீது வழக்கு பதிவு!!

Published : Sep 22, 2019, 02:09 PM IST
பிளஸ்-1 மாணவியிடம் ஆபாசமாக பேசிய அரசு பள்ளி ஆசிரியர்கள்...  12 பேர் மீது வழக்கு பதிவு!!

சுருக்கம்

மாணவியிடம் ஆபாசமாகவும், அசிங்க அசிங்கமாக பேசியதாக அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 12 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னையை அடுத்த குன்றத்தூரை சேர்ந்த மாணவி ரஞ்சினி, பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். அவருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் இலவச மடிக்கணினி கொடுக்கப்படவில்லை. பள்ளியில் அவரது பெற்றோர் கேட்டும் கொடுக்கவில்லை. இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதன்பிறகு அந்த மாணவிக்கு மடிக்கணினி கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கல்வி அதிகாரிகளிடம் புகார் செய்ததால், சம்பந்தப்பட்ட மாணவியை ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் தூண்டுதலின் பேரில் மாணவர்கள் சிலர் ஆபாசமாகவும், அசிங்கமான வார்த்தைகளால் பேசி மிரட்டியதாகயுள்ளனர்.

இதனால், அந்த மாணவி, பள்ளிக்கு செல்ல மறுப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பள்ளி கல்வித்துறைக்கும், போலீஸ் கமிஷனருக்கும் மாணவியின் அம்மா புகார் ஒன்றை அளித்தார். அதன்பேரில் அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 12 ஆசிரியர்கள், 10 மாணவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்