கேரளா மாநிலம் கொச்சி அருகே உள்ள துறைவூர் பகுதியைச் சேர்ந்தவர் லிஜி. இவரது தாயாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் 4வது மாடியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கேரளாவில் மருத்துவமனைக்குள் புகுந்து இளம்பெண்ணை 12 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கேரளா மாநிலம் கொச்சி அருகே உள்ள துறைவூர் பகுதியைச் சேர்ந்தவர் லிஜி. இவரது தாயாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அங்கமாலி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 4வது மாடியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது தாயாருக்கு உதவியாக லிஜி இருந்து வந்தார். அப்போது மருத்துவமனைக்கு வந்த நபருடன் லிஜி திடீரென வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க;- உல்லாசமாக இருக்கும் போது இனிச்சது! இப்ப கசக்குதா? கழுவி ஊற்றிய கள்ளக்காதலி!ஆத்திரத்தில் கதறவிட்ட கள்ளக்காதலன்
அப்போது, எதிர்பாராத விதமாக தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லிஜியை சரமாரியாக 12 இடத்தில் குத்தியுள்ளார். இதில், படுகாயமடைந்த லிஜி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் புகுந்து நோயாளிகள் முன்னிலையில் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- 80 வயது கிழவியை தூக்கி சென்று பலாத்காரம்.. அலறியும் விடாமல் கஞ்சா போதையில் இளைஞர் செய்த கொடூரம்.!
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக மகேஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். பள்ளிப்பருவம் முதல் இருவரும் பழகி வந்த நிலையில், வேறொருவரை திருமணம் செய்து, தன்னுடன் பேசுவதை நிறுத்தியதால் கொலை செய்ததாக கூறியுள்ளார். மேலும், கத்தியால் குத்த முயன்ற போது, தப்பியோடியதால் துரத்தி சென்று 12 முறை குத்தியதாக மகேஷ் கூறினார்.