அம்மா என்ன டியூஷன் மாஸ்டர் மிரட்டியே நாசம் பண்ணிட்டான்! கதறிய மகள்! பதறிய பெற்றோர்! இறுதியில் நடந்தது என்ன?

By vinoth kumar  |  First Published Jul 13, 2023, 1:19 PM IST

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்நாதன்(40).  தோல் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். மாலையில் தனியார் டியூசன் சென்டரில் வேதியியல் பாட ஆசிரியராக வேலை செய்து வந்தார். 


பள்ளி மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அடிக்கடி மிரட்டி பலாத்காரம் செய்து வந்த டியூசன் ஆசிரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்நாதன்(40).  தோல் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். மாலையில் தனியார் டியூசன் சென்டரில் வேதியியல் பாட ஆசிரியராக வேலை செய்து வந்தார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- குழந்தை என்னுடைய ஜாடையில் இல்லை! இது வேற யாருக்கோ பிறந்தது! ஆத்திரத்தில் தந்தை என்ன செய்தார் தெரியுமா?

இந்நிலையில் செந்தில்நாதனுக்கு டியூசன் சென்டருக்கு படிக்க வந்த 17 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து,  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் செந்தில்நாதன் தனது பிறந்த நாள் அன்று மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். 

இதையும் படிங்க;-  Power Shutdown in Chennai: சென்னையில் இன்று முக்கிய இடங்களில் 5 மணிநேரம் பவர் கட்! எங்கெல்லாம் தெரியுமா?

இதுதொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியே பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதனிடையே, மாணவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து பெற்றோர் மகளிடம் விசாரித்துள்ளனர். அப்போது தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவி கதறிய படி கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்  ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள டியூசன் ஆசிரியர் செந்தில்நாதனை தேடி வருகின்றனர்.

click me!