திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கடந்த 3ம் தேதி நடத்தப்பட்ட இரட்டை படுகொலை சம்பவத்தில் குறியீடு ஒன்றை தவிற வேறு எந்த துப்பும் துலங்காததால் காவல் துறையினர் திகைத்து நிற்கின்றனர்.
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த பி.மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த உறவுமுறை பெண்ணான சாரதா என்பவரை திருமணம் செய்து கொண்டு குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்து வந்தார். தனது குத்தகை விவசாய நிலத்தின் நடுவே வீடு அமைத்து அதில் இருவரும் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 3ம் தேதி வழக்கம் போல் தங்களது வீட்டு வாசலில் தம்பதியர் இருவரும் கட்டிலில் படுத்து உறங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவரையும் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு என்ற பெயர் மாறி கஞ்சா நாடு என பெயர் வந்துள்ளது - அன்புமணி ராமதாஸ் பேட்டி
முதல் கட்டமாக கொலை செய்யப்பட்ட இருவரது செல்போன் தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் எந்தவித துப்பும் துலங்கவில்லை. மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஒன்றிரண்டு சிசிடிவி கேமரா பதிவுகளும் கொலைக் விசாரணையில் எந்தவித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான 4 இடங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை
இந்நிலையில் தம்பதியர் கொலை செய்யப்பட்ட வீட்டு வாசல் கதவில் ஐ என்ற குறியீடு மட்டும் ரத்தத்தால் குளியிடப்பட்டுள்ளது. பொதுவாக கொலையாளிகள் நாங்கள் தான் கொலையை செய்தோம் என்று அடையாளப்படுத்துவதற்காக இதுபோன்ற குறியீடுகளை இட்டுச் செல்வர். அந்த வகையில் இந்த குளியீடு இடப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டு சுமார் 10 நாட்களாகும் நிலையில், தற்போது வரை துப்புதுலங்காமல் இருப்பது காவல்துறைக்கு கூடுதல் தலைவலியாக அமைந்துள்ளது.