இளைஞரை கடத்தி கொடூரமாக தாக்கியதுடன், பாட்டிலில் சிறுநீரை குடிக்க வைத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞரை கடத்திச் சென்ற சிலர், அவரை அடித்து துன்புறுத்தியதுடன், அவரை கட்டாயப்பட்டுத்தி சிறுநீரை குடிக்க வைத்ததுடன், ஷூவில் தண்ணீர் குடிக்க வைத்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் சுமேர்பூர் அருகே உள்ள பாருண்டா கிராமத்தில் நடந்துள்ளது. அந்த இளைஞர் அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அந்த இளைஞரை கடத்தி, இரவு முழுவதும் மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கி உள்ளனர். மேலும் அவரை மது பாட்டிலில் சிறுநீரையும், காலணியில் இருந்த தண்ணீரையும் குடிக்க வைத்தனர்.
ஜூன் 15 இரவு நடந்த சம்பவங்கள் தொடர்பாக சுமர்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் இதுதொடர்பாக, லக்ஷ்மண்ராம் தேவாசி, ஜவனாராம், பீமாரம், நவரம் மற்றும் தர்காரம் தேவாசி ஆகிய ஐந்து பேரை நேற்று செய்தனர். மேலும் மீதமுள்ள குற்றவாளிகளை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
வெள்ளத்தில் தத்தளிக்கும் வட மாநிலங்களில் ஒரே நாளில் 21 பேர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு
சுமேர்பூர் காவல் நிலையப் பொறுப்பாளர் ரவீந்திரசிங் கிஞ்சி இதுகுறித்து பேசிய போது “ சிரோஹியின் பியூ கிராமத்தைச் சேர்ந்த கலுராம் தேவாசி திருமணமாகாதவர், அவர் தனது கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்துள்ளார். இது குறித்து திருமணமான பெண்ணின் சகோதரருக்கு தெரிய வந்ததும், உறவினர்களிடம் கூறியுள்ளார். ஜூன் 9 அன்று, பாதிக்கப்பட்ட கலுராம், சுமர்பூருக்கு அருகிலுள்ள பருந்தா கிராமத்திற்கு வந்துள்ளார்.
அப்போது பாருண்டா சாலையில் அமைந்துள்ள பூரியா பாபா மந்திர் அருகே பைக் மற்றும் காரில் வந்த 9 பேர், அவரை கடத்திச் சென்று சிரோஹியின் சர்தார்புரா கிராமத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குற்றம் சாட்டப்பட்ட லக்ஷ்மண்ராம், ஜவனாராம், பீமாரம், ஹக்மாரம், நவரம், லகாரம், லக்ஷ்மண்ராம் சுபர்ணா, கோபராம், தர்காரம் தேவசி ஆகிய 9 பேருடன் சேர்ந்து கலுராமை தாக்கி உள்ளனர். அவரது மொபைல் மற்றும் சிம்மை உடைத்தனர்.கோபராம் என்ற நபர், மதுபாட்டில்களில் சிறுநீரை நிரப்பி கொண்டு வந்து, கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தார்.
மற்றொரு நபர் தனது காலணியில் தண்ணீரை நிரப்பி குடிக்க வைத்தார். அவரை மரத்தில் கட்டி வைத்து இரவு முழுவது தாக்கி உள்ளனர். தொடர்ந்து அவரின் பெற்றோரை வரவழைத்த போலீஸார், அபராதத் தொகையாக, 5,000 ரூபாய் வசூலித்து, அதிகாலை, 5 மணிக்கு விடுவித்தனர்.” என்று தெரிவித்தார்.
பியூ கிராமத்தைச் சேர்ந்த தர்காரம் தேவாசியின் உத்தரவின் பேரில் குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட கலூராமை கடத்திச் சென்று அவருடன் மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபட்டதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இடனிடையே சுமேர்பூர் காவல் நிலையத்தில் பியூவைச் சேர்ந்த தர்காரம், லக்ஷ்மன் ராம் தேவாசி, ஜவனராம், பீமாரம், ஹக்மரம், நவரம், சுபர்ணாவைச் சேர்ந்த லட்சுமண்ராம், கோபால்ராம், வெரவில்பூரைச் சேர்ந்த லகாரம் உள்ளிட்ட 9 பேர் மீது கடத்தல் மற்றும் தாக்குதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி!