Latest Videos

2-வது திருமணத்துக்கு எதிர்ப்பு! இரும்பு கம்பியால் மருமகள் அடித்து கொலை! ஜாமீனில் வந்த மாமனார் தற்கொலை.!

By vinoth kumarFirst Published Jul 11, 2023, 2:18 PM IST
Highlights

நெல்லை மாவட்டம் இட்டேரி கேபிரியேல் நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (56). கூலி தொழிலாளி. இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகன் தமிழரசன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.  இவரது மனைவி முத்துமாரி (26). தங்கராஜ் மனைவி இறந்துவிட்ட நிலையில் 2வது திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார். இதற்கு மகன் மற்றும் மருமகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

நெல்லையில் இரும்பு கம்பியால் மருமகளை அடித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாமனார் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம் இட்டேரி கேபிரியேல் நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (56). கூலி தொழிலாளி. இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகன் தமிழரசன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.  இவரது மனைவி முத்துமாரி (26). தங்கராஜ் மனைவி இறந்துவிட்ட நிலையில் 2வது திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார். இதற்கு மகன் மற்றும் மருமகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தங்கராஜ் தான் 2வது திருமணம் செய்ய வேண்டும் என்பதால் வீட்டையும் தன் பெயரில் எழுதித் தருமாறு தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். 

இதையும் படிங்க;- உல்லாசத்துக்கு அழைத்த கள்ளக்காதலன்.. ஆசை ஆசையாய் சென்ற பெண்.. இறுதியில் நடந்த பயங்கரம்..!

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தமிழரசன் வீட்டை விட்டு வெளியே சென்றதைப் பார்த்த தங்கராஜ், வீட்டில் தனியாக இருந்த மருமகள் முத்துமாரியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மாமனார் மருமகளை இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தங்கராஜை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க;-  கடைக்கு சென்ற இடத்தில் கண்டதும் காதல்! கள்ள உறவால் பிறந்த குழந்தை! கணவனுக்கு பயந்து பெண் செய்த காரியம்!

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தங்கராஜ் அண்மையில் ஜாமீனில் வெளியில் வந்தார். அதன் பின்பு அவர் யாருடனும் சரிவரப் பேசாமல் இருந்துவந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ரெட்டியார்பட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தங்கராஜ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!