சென்னையில் மீண்டும் அதிர்ச்சி! பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து! அலறிய பயணிகள்.!

Published : Aug 06, 2023, 11:18 AM ISTUpdated : Aug 06, 2023, 11:20 AM IST
சென்னையில் மீண்டும் அதிர்ச்சி! பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து! அலறிய பயணிகள்.!

சுருக்கம்

பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் தமிழ்ச்செல்வி (52) என்ற பெண் செங்கல்பட்டு செல்வதற்காக ரயிலுக்காக காத்திருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர் கத்தியால் குத்திவிட்டு தப்பித்துள்ளார்.

சைதாப்பேட்டை சம்பவத்தை தொடர்ந்து பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்தி குத்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 19-ம் தேதி இரவு ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கு கத்தி குத்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். பயணிகள் முன்பாக நடந்த இந்த கொலை சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 

இதையும் படிங்க;- காஞ்சிபுரத்தில் பயங்கரம்! சினிமா பாணியில் நாட்டு வெடிகுண்டு வீசி திமுக பிரமுகர் படுகொலையால் பதற்றம்!

பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் தமிழ்ச்செல்வி (52) என்ற பெண் செங்கல்பட்டு செல்வதற்காக ரயிலுக்காக காத்திருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர் கத்தியால் குத்திவிட்டு தப்பித்துள்ளார். 

இதையும் படிங்க;- நண்பனின் மனைவியை கரெக்ட் செய்து உல்லாசம்.. இடையூறாக இருந்த கணவர் கொலை.. நாடகமாடிய ஷிவானி சிக்கியது எப்படி?

கத்திக்குத்தால் காயமடைந்து வலியால் துடித்துக்கொண்டிருந்த இந்த பெண்ணை பயணிகள் மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வீடு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி