கோவை இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சூப் கடை உரிமையாளர் கைது; இரகசிய தொடர்பை துண்டித்ததால் விபரீதம்

By Velmurugan s  |  First Published Aug 5, 2023, 12:52 PM IST

கோவையில் கடந்த 28ம் தேதி இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சூப் கடை உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


கோவை மாவட்டம் சேரன்மாநகரில் உள்ள பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரது மனைவி ஜெகதீஸ்வரி. அன்னூர் பகுதியில் சக்ரவர்த்தி தோட்ட வேலை மற்றும் பெயிண்டர் வேலை பார்த்து வந்த நிலையில் மனைவி ஜெகதீஸ்வரி வீட்டிலேயே இருந்து தனது ஒரே மகளை பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 28ம் தேதி ஜெகதீஸ்வரி வீட்டில் ரத்தம் வடிய படுக்கையில் சடலமாக கிடந்துள்ளார். இதைத் தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.

Tap to resize

Latest Videos

விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து நான்கரை சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நான்கு தனிப்படை அமைத்து ஆதாயக்கொலையா அல்லது பாலியல் கொலையா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த டிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும் மற்றும் அக்கம் பக்கத்தினரிடமும் விசாரணை செய்ததன் அடிப்படையில் கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த சூப் வியாபாரியான மோகன்ராஜ் என்பவரை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர உதவி ஆணையர் பார்த்திபன், இந்த கொலை வழக்கு தொடர்பாக மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் நான்கு குழு அமைத்து குற்றவாளியை தேடும் பணி நடைபெற்றது. 

16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; கேரளா வாலிபருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை

இந்த நிலையில்  அதே பகுதியில் முன்பு வசித்து வந்த சூப் வியாபாரியான  மோகன்ராஜ் என்பவருடன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறிய நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அங்கிருந்து கோவை ராமநாதபுரத்திற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார் மோகன்ராஜ்.

இது குறித்து சேரன்மாநகர் பகுதியிலிருந்து ரேஸ்கோர்ஸ் வரையிலான சுமார் 250 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம். அதில் மோகன்ராஜ்  தனது ஜாவா இருசக்கர வாகனத்தை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அவரது கடையில் நிறுத்தி வைத்து விட்டு வேறு ஒரு ஸ்கூட்டி வாகனத்தை எடுத்து கொண்டு அவினாசி சாலை வரை சென்ற அவர், அங்கு ஒரு ஸ்டிக்கர் கடையில் போலி வாகன பதிவெண்ணை வாங்கி ஸ்கூட்டியில் ஒட்டி ஜெகதீஸ்வரியின் வீட்டிற்கு சென்று கொலை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு மீண்டும் கடைக்கு வரும் வழியில் போலி ஸ்டிக்கரை மாற்றியதாகவும் கூறினார்.

வாகன ஓட்டிக்கு உதவி செய்ய சென்ற காவலர் கார் மோதி பலி; தொழில் அதிபர் கைது

மேலும்  கடந்த 2016 ம் ஆண்டு முதல் 21 ம் ஆண்டு வரை மோகன்ராஜ்  பாலாஜி நகர் பகுதியில் வசித்த போது இருவருக்கும் இடையே இருந்த நெருக்கம் அண்மை காலமாக குறைந்ததால் ஜெகதீஸ்வரி மீது சந்தேகம் எழுந்ததாகவும் எப்போதும் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் வேறு  எண்ணிலிருந்து மட்டுமே ஜெகதீஸ்வரியை தொடர்பு கொண்டதாகவும் கூறியதுடன் தற்போதும் காவல்துறையை திசை திருப்பவே நம்பர் பிளேட்டை மாற்றியும் சாதாரணமாக தனது பணியை மேற்கொண்டும் வந்துள்ளார் மோகன்ராஜ் எனவும் ஆதாயத்திற்காக கொலை செய்யப்பட்டதாக திசைதிருப்பும் வகையில் ஜெகதீஸ்வரியின் நான்கரை சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் தற்போது அவரிடமிருந்து ஒரு ஜாவா இருசக்கர வாகனம் மற்றும் ஒரு ஸ்கூட்டி வாகனம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

click me!