16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; கேரளா வாலிபருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை

By Velmurugan s  |  First Published Aug 5, 2023, 11:10 AM IST

திருப்பூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கேரளா மாநில வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் சிபி (வயது 23). இவர் திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு இவர் தன்னுடன் வேலை செய்த 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு மகளிர் காவல் துறையினர் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து சிபியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில்  தீர்ப்பு கூறப்பட்டது. போக்சோ பிரிவுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1000 அபராதம், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திய குற்றத்திற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1000 அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.25 ஆயிரம் வழங்கவும் நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். 

Tap to resize

Latest Videos

வாகன ஓட்டிக்கு உதவி செய்ய சென்ற காவலர் கார் மோதி பலி; தொழில் அதிபர் கைது

திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு வரும் இளம் பெண்கள், சிறுமிகளிடம் ஆசை வார்த்தை கூறி இளைஞர்கள் பலர் தங்களது பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்திக்கொள்வது தொடர்கதையாக உள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெடுஞ்சாலை ஓரமாக வாகன ஓட்டிகளுக்கு ஒய்யாரமாக போஸ் கொடுத்த புலி

click me!