நள்ளிரவில் மின்னல் வேகத்தில் வந்த கார்.. திறந்து பார்த்த போலீஸ்.. நாக்கு, இதயம், மூளை இருந்ததால் அதிர்ச்சி.!

By vinoth kumar  |  First Published Aug 5, 2023, 12:51 PM IST

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பழைய பைபாஸ் சாலையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுக்குமாரி தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 


தேனியில் மின்னல் வேகத்தில் வந்த காரில் போலீசார் சோதனையிட்ட போது மனித உறுப்புகளான நாக்கு, மூளை, கல்லீரல் கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பழைய பைபாஸ் சாலையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுக்குமாரி தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12.30 மணியளவில் அதிவேகத்தில் வந்த காரை சோதனையிட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் இருந்த 3 பேரை காரில் இறந்து கீழே இறங்க வைத்து விசாரித்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- நண்பனின் மனைவியை கரெக்ட் செய்து உல்லாசம்.. இடையூறாக இருந்த கணவர் கொலை.. நாடகமாடிய ஷிவானி சிக்கியது எப்படி?

அதில் அவர்கள் வாடிப்பட்டியைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன், கமுதியைச் சேர்ந்த டேவிட் பிரதாப் சிங், பசும்பொன்னைச் சேர்ந்த முருகன் என்பதும், தெரியவந்தது. போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை பிரித்து சோதனையிட்டனர். அதில் நாக்கு, மூளை, கல்லீரல், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்பு பாகங்கள் தனித்தனியாக பிளாஸ்டிக் கவரில் பார்சலாக சுற்றி வைக்கப்பட்டிருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். 

உடனடியாக மூன்று பேரையும் கைது செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட உடல் உறுப்பு பாகங்கள் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. பரிசோதனை முடிவில் கூடுதல் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவர்கள் உடல் உறுப்புகளை கேரளாவில் இருந்து கொண்டு வந்ததும், உத்தமபாளையத்தை சேர்ந்த ஜேம்ஸ் என்பவருக்காக கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் ஜேம்ஸ்-ஐ கைது செய்ய சென்றபோது அவர் தலைமறைவானது தெரிந்தது.

இதையும் படிங்க;-  வேணாம் என்ன விட்டுடு ப்ளீஸ்! நான் உனக்கு அண்ணி! எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கதறவிட்ட கொழுந்தன்! நடந்தது என்ன?

தலைமறைவான உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவர் ஏற்கனவே நரபலி வழக்கில் மற்றும் ரைஸ் புல்லிங், இரிடியம் வழக்குகளில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. உடல் உறுப்புக்கள் காரில் வைத்து கடத்தப்பட்ட சம்பவம் உத்தமபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;-  Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா?

click me!