கஞ்சா ரெய்டுக்கு சென்ற போலீசார்.! சிக்கிய நாட்டு வெடிகுண்டுகள்,ஜெலட்டின் குச்சிகள்- அதிர்ச்சியில் கிராம மக்கள்

By Ajmal Khan  |  First Published Aug 6, 2023, 10:33 AM IST

கம்பம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக சென்ற போலீசாரிடம் நாட்டு வெடிகுண்டுகள் சிக்கிய சம்பவம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
 


கஞ்சா சோதனைக்கு சென்ற போலீசார்

கஞ்சா வியாபாரத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள அணைப்பட்டி என்ற நாகைய கவுண்டன்பட்டி கிராமத்தில் ஒரு சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக உத்தமபாளையம் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலினைத் தொடர்ந்து விரைந்து சென்ற மதுவிலக்கு போலீசார் சண்முகாநதி அணைக்குச் செல்லும் சாலையில் ஒரு சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருப்பதை கண்டறிந்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

மேலும் அவர்கள் கஞ்சா வைத்திருக்கும் இடத்தை பரிசோதனை செய்தபோது அங்கு ஒரு சில நாட்டு வெடிகுண்டுகளையும், நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கு தேவையான ஜெலட்டின் குச்சி, டெடனேட்டர் கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

சிக்கிய நாட்டு வெடி குண்டு

பின்னர் கஞ்சாவுடன் நாட்டு வெடிகுண்டுகளையும் வெடி மருந்துகள் மற்றும் திரிகளை பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீசார் அவைகளை ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு,பறிமுமுதல் செய்யப்பட்ட 1.5 கஞ்சாவுடன், கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டு வெடிகுண்டுகள் குறித்து ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ராயப்பன்பட்டி கிராமத்தில் ஆலய பெருந்திருவிழா நடைபெறும் நேரத்தில் நடந்திருப்பது அப்பகுதி பொதுமக்களிடம் மிகுந்த அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

நள்ளிரவில் மின்னல் வேகத்தில் வந்த கார்.. திறந்து பார்த்த போலீஸ்.. நாக்கு, இதயம், மூளை இருந்ததால் அதிர்ச்சி.!

click me!