அபார்ட்மெண்ட் மாடியில் பயங்கரம்.. இளம்பெண் கதற கதற பலாத்காரம் செய்து நிர்வாண கொலை.. காலேஜ் ஸ்டூடண்ட் கைது.!

Published : Nov 29, 2021, 10:18 AM IST
அபார்ட்மெண்ட் மாடியில் பயங்கரம்.. இளம்பெண் கதற கதற பலாத்காரம் செய்து நிர்வாண கொலை.. காலேஜ் ஸ்டூடண்ட் கைது.!

சுருக்கம்

மகாராஷ்டிரா மாநிலம் குர்லா அடுத்த எச்.டி.இ.எல். காலனியில் பயன்படுத்தாத 13வது மாடி கட்டிடம் உள்ளது. 18 வயது இளைஞர் ஒருவர் தனது இரண்டு நண்பர்களுடன் குர்லா பகுதியில் உள்ள காலி கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு வீடியோ பதிவு செய்ய சென்றுள்ளனர்.  அப்போது, 13வது மொட்டை மாடியில் பெண்ணின் சடலம் நிர்வாணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மும்பையில்  13-வது மாடியில்  20 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஆடையின்றி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த கொலை தொடர்பாக கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் குர்லா அடுத்த எச்.டி.இ.எல். காலனியில் பயன்படுத்தாத 13வது மாடி கட்டிடம் உள்ளது. 18 வயது இளைஞர் ஒருவர் தனது இரண்டு நண்பர்களுடன் குர்லா பகுதியில் உள்ள காலி கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு வீடியோ பதிவு செய்ய சென்றுள்ளனர்.  அப்போது, 13வது மொட்டை மாடியில் பெண்ணின் சடலம் நிர்வாணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிதைந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், அந்த இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. 

 இதுகுறித்து போலீசார் டிஜிபி பிரணய் அசோக் கூறுகையில்;-  குர்லா வெஸ்டில் உள்ள காலனியில் சி பிரிவில் உள்ள கட்டிடம் எண் 16இன் மொட்டை மாடியில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சடலம் மீட்கப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் மொட்டை மாடிக்கும் வீடியோ எடுக்க சென்றனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்த பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்டது. அந்த பெண் யார் என்பது குறித்து முழு விவரம் தெரியவில்லை. அவரை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம். இந்த அடுக்குமாடி கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாகவே காலியாக உள்ளது. சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லை. வாட்ச்மேன்களும் இல்லை. சமீபத்தில் மாயமான பெண்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. 

இவ்வழக்கில் முதலாமாண்டு பி.காம் மாணவர் உள்பட இருவரை கைது செய்துள்ளோம். கொலையான பெண் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி உள்ளார்.  அதனால், கல்லூரி மாணவருடன் சேர்ந்து இருவரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். அடுக்குமாடி கட்டிடம் காலியாக இருந்ததால், கட்டிடத்தில் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை
கதறிய தங்கை.. பதறிய அக்கா கவிப்பிரியா.. ரத்த வெள்ளத்தில் பிரசாத் அலறல்.. நடந்தது என்ன?