தமிழ்நாட்டில் நடக்கப்போகும் பயங்கர பிரளயம்... உடான்ஸ் விடும் பெண் சாமியார்..!

Published : Nov 28, 2021, 01:03 PM ISTUpdated : Nov 29, 2021, 02:37 PM IST
தமிழ்நாட்டில் நடக்கப்போகும் பயங்கர பிரளயம்... உடான்ஸ் விடும் பெண் சாமியார்..!

சுருக்கம்

ஏற்கனவே தமிழ்நாடு பிரளயத்தில் தான் போய்க்கொண்டிருக்கிறது...! இதுல உடான்ஸ் விடுகிறார் புது பெண் சாமியார் ஒருவர்.

ஏற்கனவே தமிழ்நாடு பிரளயத்தில் தான் போய்க்கொண்டிருக்கிறது...! இதுல உடான்ஸ் விடுகிறார் புது பெண் சாமியார் ஒருவர்.

தமிழ்நாடு என்னைக்கு நிம்மதியா இருந்திருக்கு? சுனாமி, வெள்ளம், புயல், அரசியல் சிக்கல்கள், பண மதிப்பிழப்பு, பெட்ரோல் விலை உயர்வு, மக்களுக்கு அன்றாட பல உடல் சார்ந்த உபாதைகள், வேற இன்னும் எத்தனையோ..? இன்னும் இதை விட என்ன வேண்டும் புதிதாக பிரளயமும், மன வருத்தமும் ஏற்பட்டு விடப்போகிறது. எல்லாவற்றையும்விட கொடூரமான கோவிட்-19 என்னும் அரக்கனை புதுப்புது வடிவில் நாம் சந்தித்து விட்டோம். சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். இந்நிலையில் தான் வாய்க்கு வந்ததை உலறிய இந்த பெண் சாமியார் அளித்த வாக்கை நம்பி அரண்டு கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். 

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீ பவித்ரா காளிமாதா.  இவர் சமீபத்தில் சொன்ன வாக்கு திகுதிகுப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் மகா தீபத்தை தரிசனம் செய்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்தார். முகத்தில் சாயம் பூசி உதட்டில் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு, நிறைய தங்க நகைகளை அணிந்து இருந்தார். சொகுசு காரில் வந்தார். தலைமுடியிலும் சாயம் அடித்திருந்தார். திருவண்ணாமலை ரமணாஸ்சிரமம் அருகில் உள்ள காளி கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் சென்றார். முன்னதாக அவர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு குங்கும திலகமிட்டு ஆசி வழங்கினார்.

அவர் கூறும்போது, சிறுவயதில் காளிமாதா மீது எனக்கு பக்தி ஏற்பட்டது. அதுமுதல் காளிமாதா வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறேன். இரவில் மயானம் சென்றும் வழிபாடு செய்வேன். உலகில் அதர்மம் தலைதூக்கும்போது சிவன், காளியை அவதாரம் எடுக்க செய்வார். உண்ணாமலை அம்மன் போல் காளியும் சிவனுக்கு மிகவும் விருப்பமானவள். அண்ணாமலையார் உத்தரவின்பேரில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் சென்று வந்துள்ளேன்.

உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. தமிழகத்தில் 3 மாதத்திற்கு பிறகு பயங்கர பிரளயம் ஏற்படும். பின்னர் அமைதியான சூழ்நிலை உருவாகும்’’ எனத் தெரிவித்துள்ளார். அடேங்கப்பா. இந்த பெண் சாமியாரின் வாக்கை நம்பி நம் மக்கள் என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என மிரண்டு போயுள்ளனர். காளியாத்தா எத்தனையோ இடர்களை சந்தித்து விட்டோம். இனி உன் வாக்கை நம்பி நாங்கள் நடுங்கி கொண்டு இருக்கணுமா தாயே..?
 

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!