ஆசை வார்த்தை கூறி தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்களிடம் 100 கோடி மோசடி.. பலே கில்லாடி பெண்.. வெளியான பகீர்.!

Published : Nov 28, 2021, 12:41 PM IST
ஆசை வார்த்தை கூறி தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்களிடம் 100 கோடி மோசடி.. பலே கில்லாடி பெண்.. வெளியான பகீர்.!

சுருக்கம்

ஐதராபாத்தை சேர்ந்தவர் ஷில்பா சவுத்ரி. சமூக சேவகராக வலம் வந்தார். சினிமா பிரபலங்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். அவ்வப்போது பிரம்மாண்ட விருந்துக்கு ஏற்பாடு செய்வார்.

சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்களிடம் ஆசை வார்த்தை கூறி 100 கோடி மோசடி செய்த ஷில்பா சவுத்ரி மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஐதராபாத்தை சேர்ந்தவர் ஷில்பா சவுத்ரி. சமூக சேவகராக வலம் வந்தார். சினிமா பிரபலங்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். அவ்வப்போது பிரம்மாண்ட விருந்துக்கு ஏற்பாடு செய்வார். அங்கு கூடும் சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்களிடம் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் 3 மடங்காக திருப்பி தருவேன் என ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார்.

இதை நம்பி சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் அவரிடம் பெரும் பணத்தை முதலீடு செய்தனர். இதன் பிறகு பணத்தை திரும்ப தராமல் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில், திவ்யா என்ற பெண் ஷில்பாவிடம் ஒரு கோடி பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை திரும்ப கேட்ட போது ஷில்பாவின் கணவர் சீனிவாஸ் மிரட்டியுள்ளார். 

இதனால், அதிர்ச்சியடைந்த திவ்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷில்பா மற்றும் சீனிவாசனை கைது செய்தனர். ஷில்பா கைது செய்யப்பட்டதை அறிந்ததும் மேலும் 5 பெண்கள் தங்களது பணத்தை மீட்டு தரும் படி போலீசில் புகார் அளித்துள்ளனர். 

இந்த 6 பேரிடம் மட்டும் 18 கோடி ரூபாயை  ஷில்பா ஏமாற்றியுள்ளார். இன்னும் பலரை ஏமாற்றி இருக்கலாம், மோசடி செய்த தொகை 100 கோடியை தாண்டும் என போலீசார் தரப்பில் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!