வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை; மிளகாய் பொடியை தூவிச் சென்ற மர்ம நபர்கள்

By Velmurugan s  |  First Published Mar 29, 2023, 9:46 AM IST

கோவை மாவட்டம் அன்னூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் தடயத்தை அழிக்க சடலத்தைச் சுற்றி மிளகாய் பொடி தூவி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை.


கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த கரைப்பாளையம் புதுரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 54). இவரது மனைவி தங்கமணி. அதே பகுதியில் வட்டிக்கு பணம் விட்டு வசூலித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை சுப்பிரமணி சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் சமையலறையில் கழுத்து அறுபட்ட நிலையில் தங்கமணி சடலமாக கிடந்துள்ளார். 

மனைவி சடலமாக கிடப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி சத்தம் போட்டு உள்ளார். இதையடுத்து அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து அன்னூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவலின்  பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். 

Tap to resize

Latest Videos

17 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய லஞ்சம்; ஓய்வு பெற்ற ஆய்வாளருக்கு நீதிமன்றம் அதிரடி தண்டனை

அப்போது கொலையாளிகள் தடயத்தை மறைக்க உடலை சுற்றிலும் மிளகாய் பொடி தூவியது தெரிய வந்தது. பின்னர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் யார்? கொலைக்கான நோக்கம் என்ன? என்பது குறித்து விசாரணையை முடுக்கியுள்ளனர். 

அரசு விழாவில் தண்ணீர் கூட வழங்காமல் அழைக்களிக்கப்பு; மாற்று திறனாளிகள் வேதனை

மேலும் சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

click me!