சென்னையில் உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட உணவு டெலிவரி ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏடிஎம் கொள்ளை முயற்சி
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம் மையங்களில் நடைபெற்ற தொடர் கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்றுபடுத்திய நிலையில், சென்னையில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் நடைபெற்ற கொள்ளை முயற்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கேகே நகர் முனுசாமி சாலையில் தனியார் வங்கி( DBS) ஏடிஎம் மையம் உள்ளது. இந்த வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தை நேற்று பெரிய கற்களை கொண்டு மர்ம நபர் ஒருவர் உடைக்க முயற்சி செய்துள்ளார். அவர் முகத்தை தூண்டால் மறைந்து கொண்டு இந்த சம்பவத்தை செய்துள்ளார். கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக வங்கியின் ஹைதராபாத் அலுவலகத்தில் அலாரம் அடித்துள்ளது. இதனையடுத்து அந்த வங்கி நிர்வாகம் சார்பாக கேகே நகர் காவல் நிலையத்துக்கு புகார் அளித்தனர்.
17 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய லஞ்சம்; ஓய்வு பெற்ற ஆய்வாளருக்கு நீதிமன்றம் அதிரடி தண்டனை
இதையடுத்து கே.கே நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது ஏடிஎம் இயந்திரம் கற்களை கொண்டு உடைக்க முயற்சி மர்ம நபரை காணவில்லை. அலாரம் அடித்த உடன் கொள்ளையன் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை கேகே நகர் போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது உணவு டெலிவரி ஊழியரான அசோக் என்பவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். மது போதையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்ததாக போலீசார் விசாரணையில் அசோக் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
கற்களை கொண்டு சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி..! அலாரத்தால் அலறி ஓடிய கொள்ளையர்