17 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய லஞ்சம்; ஓய்வு பெற்ற ஆய்வாளருக்கு நீதிமன்றம் அதிரடி தண்டனை

By Velmurugan sFirst Published Mar 28, 2023, 9:23 PM IST
Highlights

17 ஆண்டுக்கு முன் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளருக்கு திருச்சி நீதிமன்றம் 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், பெரகம்பி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சீனிவாசன். கடந்த 2006ம் ஆண்டு இவர் மீது திருச்சி மாவட்டம், சிறுகனூர் காவல் நிலையத்தில் அடிதடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் சீனிவாசனை சிறைக்கு அனுப்பாமல் குற்றத்தை குறைத்து பதிவு செய்து காவல்நிலைய பிணையில் விடுவிக்க அப்போது சிறுகனூர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய செல்வராஜ் என்பவர் ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து சீனிவாசன் திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை  காவல்துறையினருக்கு புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து அப்போது  திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றிய  அம்பிகாபதி தலைமையிலான காவல்துறையினர் ஆய்வாளர் செல்வராஜ்  சீனிவாசனிடம்  லஞ்சம் பெற்ற போது  கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அரசு விழாவில் தண்ணீர் கூட வழங்காமல் அழைக்களிக்கப்பு; மாற்று திறனாளிகள் வேதனை

இந்த வழக்கு திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 17 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை இன்று முடிந்த நிலையில்  திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பில் லஞ்ச பணம் பெற்ற குற்றத்திற்காக சீனிவாசனுக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூ.10,000/- அபராதமும் விதித்து தீர்பளித்து ரூ.10,000/- அபராதத்தை கட்ட தவறினால் 6மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்பளித்தார்.

9ம் வகுப்பு சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை; வாலிபருக்கு 20 ஆண்டு சிறை விதித்து உத்தரவு

click me!