அரியலூர் மாவட்டத்தில் 9ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சன்னாசிநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகன்டன். இவர் கடந்த 15.07.2021 அன்று 9ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசை வார்த்தை கூறி காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று சிறுமியை மணிகன்டன் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் மணிகண்டனை கைது செய்தனர். கடத்தப்பட்ட நபர் சிறுமி என்பதால் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பாம்பு வாந்தி எடுத்ததாகக் கூறி போலி நவரத்தினம் விற்பனை; பக்தர்களுக்கு விபூதி அடித்த போலி சாமியார்
மேலும் சிறுமியை மணிகண்டன் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது. வழக்கு விசாரணை அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் குற்றவாளி மணிகன்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.மேலும் சிறுமியின் குடும்பத்திற்க்கு ரூ.7 லட்சம் இழப்பீடு தொகை அரசு வழங்க வேண்டும் என உத்திரவிட்டார்.
புதுவையில் சிறுமி கற்பழித்து கொலை; ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு