பெரம்பலூர் அருகே கள்ளத்தொடர்பை வெளியே கூறிய இளைஞரை உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு தலைமறைவாகியுள்ள நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவிற்கு உட்பட்ட நரியோடை பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி. அதே பகுதியைச் சேர்ந்த ராதிகா என்ற பெண்ணுடன் கள்ள தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அதே பகுதியைச் சேர்ந்த அஜித் என்ற 26 வயதுடைய இளைஞர் வெளியே கூறிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ரஜினி மது போதையில் தான் வைத்திருந்த உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியைக் கொண்டு அஜித்தை சுட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற மங்கள மேடு காவல் துறையினர் இறந்த அஜீத்தின் உறவினர்களிடம் இருந்து அவரது உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தந்தையைின் சடலத்திடம் ஆசி பெற்று தேர்வு எழுதச்சென்ற மாணவன்; திண்டுக்கலில் நிகழ்ந்த சோகம்
மேலும் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், ரஜினியிடம் துப்பாக்கி வந்தது எப்படி, கொலை நடந்தது எப்படி என்பது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தை வெளியில் கூறிய இளைஞர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரௌடிகளின் கொட்டத்தை அடக்க விரைவில் எண்கவுண்ட்டர் - அமைச்சர் பரபரப்பு தகவல்