கற்களை கொண்டு சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி..! அலாரத்தால் அலறி ஓடிய கொள்ளையர்

By Ajmal Khan  |  First Published Mar 28, 2023, 10:15 AM IST

சென்னையில் உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கொள்ளையரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 


ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு ஏடிஎம்யில் தொடர் கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்றுபடுத்தியது. இந்த கொள்ளையில் பல லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையில் வட மாநில கும்பல் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் நடைபெற்ற கொள்ளை முயற்சி சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கேகே நகர் முனுசாமி சாலையில் தனியார் வங்கி( DBS) ஏடிஎம் மையம் உள்ளது. இந்த வங்கியில் இன்று அதிகாலை ஏடிஎம் இயந்திரத்தை பெரிய கற்களை கொண்டு மர்ம நபர் ஒருவர் உடைக்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக வங்கியின் ஹைதராபாத் அலுவலகத்தில் அலாரம் அடித்துள்ளது.

Tap to resize

Latest Videos

சொத்து தகராறு காரணமாக பெற்ற மகனை ஓட ஓட வெட்டிய தாய், தந்தை கைது

கற்களை கொண்டு உடைத்த கொள்ளையர்

இதனையடுத்து அந்த வங்கி நிர்வாகம் சார்பாக கேகே நகர் காவல் நிலையத்துக்கு புகார் வந்துள்ளது.  கே.கே நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது ஏடிஎம் இயந்திரம் கற்களை கொண்டு உடைக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்த மர்ம நபரை காணவில்லை. மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை கேகே நகர் போலீசார் தேடி வருகின்றனர்.

தப்பி ஓடிய கொள்ளையர்

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர் உடைத்து பணத்தை திருட முயற்சி செய்துள்ளார். இதற்காக கற்களை கொண்டு இயந்திரத்தை உடைத்துள்ளார். ஆனால் இயந்திரத்தை உடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஏடிஎம் மையத்தில் அலாரம் அடித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர் தப்பி ஓடியிருப்பதாக தெரிவித்துள்ளனர். இருந்த போதும் கொள்ளையனை விரைவில் கைது செய்வோம் என தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

ஒரே நிறுவனத்தில் பயின்ற 2000 பேர் குரூப் 4 யில் அதிக மதிப்பெண் பெற்றது எப்படி? விசாரணை குழு அமைத்திடுக- ஓபிஎஸ்

click me!