இந்து முன்னனி நிர்வாகி வீட்டில் 2 கை துப்பாக்கிகள் பறிமுதல்..! கோவையில் பரபரப்பு

By Ajmal KhanFirst Published Mar 29, 2023, 8:37 AM IST
Highlights

கோவை புலியகுளம் பகுதியில் இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து அயோத்தி ரவியை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

இந்து முன்னனி நிர்வாகி வீட்டில் சோதனை

கோவையில் கார் வெடிகுண்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோவையில் எந்தவித குற்றசம்பவங்களும் நடைபெறாத வகையில் போலீசார் தீவிரம் காட்டிவருகின்றனர். அந்தவகையில், கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த அயோத்தி ரவி என்பவர் வீட்டில் கைத்துப்பாக்கிகள் வைத்திருப்பதாக மாநகர காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அயோத்தி ரவி இந்து முன்னணியில் மாவட்டத் துணைத்தலைவராக கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு வரை இருந்துள்ளார். 

17 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய லஞ்சம்; ஓய்வு பெற்ற ஆய்வாளருக்கு நீதிமன்றம் அதிரடி தண்டனை

துப்பாக்கிகள் பறிமுதல்

புலியகுளம் உள்ள அயோத்தி ரவி இல்லத்தில் மாநகர துணை  ஆணையர் சந்தீப் தலைமையில், தனிப்படை போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இச்சோதனையில் இரண்டு கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கை துப்பாக்கிகளுக்கு உரிய உரிமம் இல்லாமல் வைத்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து அயோத்தி ரவியிடம் தனிப்படை போலீசார் போத்தனூர் காவல் நிலையத்தில் அழைத்து சென்று  விசாரணை நடத்தினர். அப்போது ரவி, கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்ததும், அதற்காக துப்பாக்கியை பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது. மேலும், இரண்டு கை துப்பாக்கிகள் சென்னையில் உள்ள அவரது நண்பர்கள் மூலம் வாங்கப்பட்டதும், எந்தவித அனுமதியும் பெறாமல் மிரட்டலுக்காக இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதையும் படியுங்கள்

சென்னையில் ஏடிஎம்யை உடைத்து கொள்ளை முயற்சி..! உணவு டெலிவரி ஊழியரை தட்டி தூக்கிய போலீஸ்

click me!