
தனது கள்ளக்காதலன் திருமணம் செய்துகொள்ள மறுத்ததுடன் 14 ஆவது முறையாக கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தி வந்த நிலையில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. தென்கிழக்கு டெல்லியின் ஜோத்பூர் பகுதியில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. முழு விவரம் பின்வருமாறு:-
கடந்த 8 ஆண்டுகளாக கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் வேறொரு நபருடன் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்தார். அந்த நபரை திருமணம் செய்து கொள்ளாமலேயே டெல்லியின் ஜோத்பூர் பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்தார், இந்நிலையில் இருவரும் கணவன் மனைவியாகவே வாழ்ந்து வந்தனர். இதில் 10க்கும் அதிகமான முறை அந்தப் பெண் கர்ப்பமானார், ஆனால் ஒவ்வொரு முறையும் அவரின் கள்ளக்காதலன் ஏதோ ஒரு காரணத்தை கூறி கருக்கலைப்பு செய்ய வைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் 14வது முறை அந்த பெண் கர்ப்பமானார், இந்த முறை எப்படியாவது தனது காதலனுடன் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என அந்தப் பெண் முடிவு செய்தார். இப்போவதாவது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனை அந்த பெண் வறுபுறுத்தினார், ஆனால் அதை ஏற்க மறுத்த காதலன் 14 வது முறையும் கருக்கலைப்பு செய்துவிடுமாறு அந்த பெண்ணை நிர்பந்தித்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த பெண், கடந்த 5ஆம் தேதி தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையும் படியுங்கள்: போலி சாமியார் பேச்சைக் கேட்டு ஆடு மேய்க்கும் சிறுவனை பலி கொடுத்த தம்பதி. ஆண் குழந்தைக்காக நேர்த்திக் கடன்.
ஹிந்தியில் தற்கொலை கடிதம் ஒன்றையும் அவர் எழுதி வைத்திருந்தார். அதில், திருமணம் செய்து கொள்வோம் என்ற நம்பிக்கையில் காதலுடன் உடல்ரீதியாக உறவை ஏற்படுத்தி கொண்டேன், ஆனால் 14 முறை என்னை கருக்கலைப்பு செய்ய வைத்த அந்த நபர் இறுதியில் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார், எனவே இனியும் நான் வாழ்வதைவிட இறப்பதே மேல் என்ற முடிவில் தான் இந்த தற்கொலை முடிவை எடுக்கிறேன் என அவர் அதில் கூறியுள்ளார். இந்நிலையில் போலீசார் நொய்டாவில் உள்ள மென் பொறியாளர் நிறுவனத்தில் பணிபுரியும் நபர் மீது தற்கொலைக்கு தூண்டிய தக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: ஒரே நேரத்தில் 11 பெண்களுடன் குடும்பம்... சில பெண்கள் கர்ப்பம்.. போலீசையை கிறுகிறுக்க வைத்த உல்லாச மன்னன்.
இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள போலீஸ் அதிகாரி ஒருவர், ஒரு பெண் தனது அறையில் தூக்கில் தொங்குவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது, உடனே அங்கு சென்று பார்த்தபோது பெண் இறந்து கிடந்தார், பின்னர் அவர் எழுதி வைத்த கடிதம் கைப்பற்றப்பட்டது, இதுதொடர்பாக விசாரித்ததில் அவர் பீகார் மாநிலம் முசாபராபாத்தைசே சேர்ந்தவர் என்பதும், அவர் ஏற்கனவே திருமணமாகி கணவரிடம் இருந்து கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்ததும், அப்போது அவருக்கு வேறோருவருடன் காதல் ஏற்பட்டு அவர் இறுதியில் இந்த முடிவு எடுத்ததும் தெரிய வந்தது என்றும், மேலும் கணவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.